இலங்கை விமானப்படை தலைமை காரியாலத்தில் விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான நகர்வுகள் பற்றிய பத்திரிகையாளர் மாநாடு.
12:33pm on Friday 1st November 2019
இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் தலைமையின் 2019 ம் ஆண்டுக்கான விமனப்படையின் எதிர்கால நகர்வுகள்  பற்றிய  பத்திரிகையாளர் மாநாடு கடந்த  2019 அக்டோபர் 22ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலத்தில்  பிரதான  அரங்கத்தில்   இடம்பெற்றது.

இது 05 வது  தடவையாக  இடம்பெறும்  நிகழ்வாகும்  இந்த நிகழ்வு  "ஒரு சிறிய விமானப்படை: எதிர்கால பார்வையை அடைவதில் முன்னோக்கி செல்லும் வழி" எனும்    கருப்பொருளை கொண்டதாக அமைந்து இருந்தது.

உலகின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 க்கும் மேற்பட்ட இராணுவத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகளாவிய சிந்தனைக் குழுக்கள் மற்றும் தூதர்கள் அடங்கிய  குழுவொன்று  எதிர்வரும் 2019 அக்டோபர் 24 மற்றும் 25ம் திகதிகளில்  கொழும்பு  '' ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெறும்  கருத்தரங்கில்  கலந்துகொள்ளவுள்ளனர். இதன் மூலம்  உலகளாவிய  வான் சக்தியை உருவாக்க அவர்களிடம் இருந்து  அறிவையும் திறமையையும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பெரும் வகையில் இந்த  கலந்துரையாடல் அமையும் என இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும்  பத்திரிகையாளர் மாநாட்டில்  ஊடகவியாளர்களிடம் உரை நிகழ்த்திய  விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்கள்  உரைநிகழ்த்துகையில்  '' இந்த நிகழ்வானது தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய விவாதிக்கும் ஒரு பொதுவான தளத்திற்கு விமான சக்தி குறித்த உலகளாவிய நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய சர்வதேச நிகழ்வாக அமையும் என்று கூறினார்.

இந்த  நிகழ்வில் விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் பிரசன்ன பாயோ  மற்றும் சீனவராய  கல்விப்பீட  விமானப்படை தள  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் உதேனி ராஜபக்ஷ  , விமானப்படை  பதில் ஊடக பேச்சாளர்  விங் கொமாண்டர்  இஜேஸ் சந்திரத்திலக  மற்றும்  கொழும்பு  வான் மாநாடு  செயலாளர்  விங் கொமாண்டர்  ரங்கோடகே  ஆகியோர்  கலந்துகொண்டனர்   மேலும்  அனைத்து  ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை