காடுகளை மீண்டும் உருவாக்கும் விமானப்படையின் 02 வது வேலைத்திட்டம்.
7:05am on Tuesday 12th November 2019
இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்   தலைமையின்கீழ்   இலங்கை  விமானப்படையினர்  தீவிரமாக செய்துவருகின்றனர் . அந்த வகையில்  வான் வழி மூலம் விதைக்குண்டு வீச்சி திட்டம் ஒன்றை 02 வது  முறையாக  கடந்த 2019 ம் ஆண்டு  அக்டோபர் 29 ம் திகதி  அம்பாறை லகுகள  வனப்பிரதேசத்தில்  இடம்பெற்றது

வன அபிவிருத்தி திணைக்களம் மற்றும்  வெகுசன  ஊடகம் மற்றும் , கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தின்  வேளாண்மை  மேலாண்மைப்பிரிவு  , மற்றும்  பேராதெனிய  பல்கலைக்கழகம்  என்பன இந்த திட்டத்தில் ஒன்றுசேர்ந்து செயட்பட்டுள்ளது என்பது விசேடமாகும்  .

இந்த திட்டம்  இலங்கையில் ஒரு நிலையான வளர்ச்சிக்கான  இலக்காக இருக்கும்  2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை  27% முதல் 32% ஆக உயர்த்துவதே இதன்  முதன்மை நோக்கமாகும்.

இதன்போது இலங்கை விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகாப்டர் உதவியுடன் கிட்டத்தட்ட 67,000 விதைகுண்டுகள்  தரையில் தெளிக்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை