கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் இலங்கை விமானப்படையின் இரசாயனத் உயிரியல் கதிரிய மற்றும் அணு வெடிப்பு பிரிவினர் களத்தில்.
12:20pm on Tuesday 11th February 2020
இலங்கை விமானப்படையின் இல 49 ம்   இரசாயனத் உயிரியல் கதிரிய மற்றும் அணு வெடிப்பு   பிரிவினர்    சீனாவில் வுஹான்  மாகாணத்தில்  உள்ள  இலங்கையரை  மீட்கும் பணியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உடன் இணைந்து  புறப்பட்டனர்

இந்த அணியினர்இலங்கையில்  இருந்து  சீனாவிற்கு  சென்று  அங்குள்ளவர்களை   பாதுகாப்பான முறையில்  பாதுகாப்பு  உடைஅணிவித்து  மீண்டும்  மத்தளை  விமான நிலையத்தில்  தரையிறங்கினர்.

அங்கிருந்து அழைத்துவந்தவர்களை    அவர்களின்  பொருள்கள் உட்பட  முழுமையான  பரிசோதனைக்கு  பின்பு  அவர்களிடம் எந்த ஒரு வைரஸ் தோற்றும்  இல்லை என  உறுதிசெய்யப்பட்ட பின்பு  அவர்களை  பாதுகாப்பன  முறையில்  நாட்டுக்குள் அழைத்து வந்தன்னர் .

விமானப்படை இரசாயனத் உயிரியல் கதிரிய மற்றும் அணு வெடிப்பு பிரிவு 2016 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டது.

இதன்  முதல் கட்டளை அதிகாரியாக ஸ்கொற்றன்  லீடர் (இப்போது விங் கமாண்டர்) நிலேந்திர பெரேரா ஆவார்,  அவரின் தலைமையிலே இன்றும்  இந்த பிரிவு  செயட்பட்டு வருகிறது. இந்த பிரிவில்  விமானப்படையின் 0 6 அதிகாரிகளும்  50  படைவீரரக்ளும்  உள்ளடங்குகின்றர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை