வான் சாரணிக் குழுவினரின் வருடாந்த பயிற்சி முகாம்
8:52am on Tuesday 4th October 2011
வான் சாரணியர் இயக்கத்தினரின் வருடாந்த பயிற்சி முகாம் கடந்த 06.09.2011ம் திகதி முதல் 15.09.2011ம் திகதி வரை தியத்தலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

அத்துடன் இலங்கை விமானப்படையின் முக்கிய பயிற்சி முகாமான தியதலாவையில் பயிற்சினை மேற்கொண்டதுடன் அதில் அணிவகுப்புப்பயிற்சி, தலைமைத்துவப்பயிற்சி
உட்பட அடிப்படை கணணிப்பயிற்சியும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் அணிவகுப்பு நிகழ்வு கடந்த 14.09.2011ம் திகதியன்று சிறப்பாக நடைப்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய 'கெடெட்' அணியின் இயக்குனர் 'மேஜர் ஜென்ரல்' ஜயசுந்தர கலந்து கொண்ட அதேநேரம் அணிவகுப்பு மாரியாதையுடன் பயிற்சியை சிறப்பாக முடித்தவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் தியத்தலாவை விமானப்படை முகாம் கல்விக்கழகத்தின் ஆனையாளர்,
சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.





   
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை