இலங்கை விமானப்படையானது தனது வை 12 ரக விமானத்தை அம்புயூலன்ஸ் சேவைக்காக மாற்றியமைத்தது.
8:59am on Thursday 14th May 2020
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி  விமானப்படை  வான் செயற்பாட்டு   பணிப்பளார் அவர்களின் வழிகாட்டலின்கீழ்  ரத்மலான இல 08  இலகுரக போக்குவரத்து படைப்பிரினால் வை 12  விமானம்  ஒன்றை   கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை  கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் சேவைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது .

அசாதாரண சுவாச நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மருத்துவ மற்றும் தாதியர்களுக்காக வழங்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ பாதுகாப்பு ஆடைகள் என்பன இந்த விமானத்தில்   அடங்கலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டவை 12 வான் வழி  ஆம்புலன்ஸ் வெற்றிகரமாக வானில் சோதனை செய்யப்பட்டது  இல 08 இலகுரக  போக்குவரத்து படை கட்டளை அதிகாரி . குரூப்  கேப்டன் அமல்  பெரேரா, அவர்களால்  இந்த விமானம்  இயக்கப்பட்டு  அவருடன்  ரத்மலான விமானப்படை வைத்திய பிரிவின் கட்டளை அதிகாரி குரூப்  கேப்டன் சுஜித் பெரேரா  இந்த பயணித்தில் இணைந்து கொண்டார்.

இந்த விமானம் தற்போது ரத்மலான  விமானப்படைத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை