2020 ம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர்கள் நினைவுதினம்
8:52am on Tuesday 26th May 2020
இந்தஆண்டுக்கான தேசிய வீரகளின் நினைவு தினம்  இலங்கை சோஷலிச ஜனநாயக  குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியும்  ஆயுதப்படை தளபதியுமான  கோதபாய ராஜபக்ஷ  அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது.

முப்படை மற்றும் பொலிஸாரினால் தாய்நாட்டிக்க செய்த உயிர்த்தியாகம் மற்றும்  வீரரத்தை கௌரவப்படுத்தும் வகையில்  நாட்டில் கொரோனா  தொற்றின் பாதிப்புக்குள்ளும்  பாதுகாப்பாக  இந்த நிகழ்வை   கடந்த 2020 மே 19ம் திகதி  ரணவிரு சேவா ஆணையத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்போது ஜனாதிபதி வருகையின் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது, அதன்பிறகு ரணவிரு  சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனதீரா வரவேற்புரை நிகழ்த்தினார். மத அனுசரிப்புகளைத் தொடர்ந்து உச்ச தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துவதற்காக இரண்டு நிமிட ம மௌன அஞ்சலி அளிக்கப்பட்டது.

அதன்பிறகு, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தனது தேசிய போர் வீரர்கள்  நினைவு நாள் உரையை நிகழ்த்தினார். அதிமேதகு ஜனாதிபதியின் உரையின் பின்னர், ரத்மலனாவில் உள்ள 4 வது விஐபி படைப்பிரிவிலிருந்து கட்டளை அதிகாரி  குருப்  கேப்டன் அசேல குருவிட்ட  தலைமையில்  3 பெல் 412 ஹெலிகாப்டர்கள்,  90 அடி உயரமான நினைவுச்சின்னத்தின் மீது மலர்கள்  தூவப்பட்டது .  இதன்பின்பு  ஜனாதிபதியினால்  நினைவுத்தூபிக்கு  மலர்வளையம்  வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து  முப்படை தளபதிகள் மற்றும் பிரதிநிதிகள்  போரில் இறந்தவர்களின்  உறவினர்கள்  மலர்வளையம்  வைத்தனர்

இந்த நிகழ்வில்  ஜனாதிபதி , பிரதமர் , முன்னாள் தளபதிகள்  மற்றும் முப்படை தளபதிகள் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை