விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியன இணைந்து முத்துராஜாவெல பகுதியில் சட்டவிரோத மதுபான உட்பத்தி தளம் ஒன்றை சுற்றிவளைத்தனர்
2:39pm on Tuesday 15th September 2020
விமானப்படையின்  வான்வழி கண்காணிப்புமூலம்  சட்டவிரோத மதுபான உட்பத்திநிலையமொன்று  முத்துராஜா வனபகுதியில்  விசேட அதிரடிப்படையினருடன்  இணைந்து கடந்த 2020 ஆகஸ்ட் 28 ம் திகதி சுற்றிவளைக்கப்பட்டது.

ஒரு பாதுகாப்பான தேசம், ஒழுக்கம், நல்லொழுக்கம் மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதி பணிக்குழுக்கு  அதிமேதகு ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ஷ அவர்களால் போதைப்பொருள் விநியோகம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது .

இந்த திட்டம்களை  மனதில் கொண்டு, ஒரு பாதுகாப்பான தேசம், ஒழுக்கமான, நல்லொழுக்க மற்றும் சட்டபூர்வமான சமுதாயத்தை உருவாக்க ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் , மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன,அவர்களின்  ஆலோசனைக்குஅமைய விமானப்படை மற்றும் போலீஸ் ,போலீஸ் விசேட அதிரடிப்படை  அணிகள் மற்றும் இலங்கை கடற்படை அணிகள் ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நடவடிக்கையை  செய்யும் இடத்தை  சுற்றிவளைத்து  கைப்பற்றியது .

இந்த சுற்றிவளைப்புக்காக   விமானப்படையின்  07ம்  படைப்பிரிவின் பெல் 212 ரக ஹெலிகொப்டர்  மற்றும்  கடற்படையின்  படகுகள்  என்பவற்றின் ஊடாக  போலீஸ் விசேட அதிரடிப்படை மற்றும் போலீஸ் துருப்புக்கள்  சுற்றிவளைத்தனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை