18 வது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
2:27pm on Wednesday 30th December 2020
இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால்  18 வது  விமானப்படை தளபதியாக 2020 நவம்பர் 02ம் திகதி  பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார் இதன்போது அவருக்கு எயார் மார்ஷல் நிலையும்  வழங்கப்பட்டது.

1965 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் திகதி  பிறந்த எயார் மார்ஷல் சுதர்ஸன பதிரன  அவர்கள் கண்டி தர்மராஜ  மஹா வித்தியாலயத்தின்  பெருமை மிக்க மாணவராவார் 1985 ஜூலை 2 ம்  திகதி  இலங்கை விமானப்படையின் கடேட் அதிகாரியாக இணைந்த அவர் தியத்தலாவ  விமானப்படை பயிற்ச்சி பாடசாலையில்  பயிற்சிநெறியை  நிறைவு செய்து இல 14 ம் கடேட் பயிற்சிநெறியின்  சிறந்த கடேட் அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் பாகிஸ்தான் விமானப்படையில் பரக்கும் பயிற்சிகள் மேற்கொண்டு பாகிஸ்தான் விமானப்படையால் சிறந்த நடப்பு விமான கடேட்  அதிகமான விருதையும் பெற்றார்
 எயார் மார்ஷல் பத்திரன அவர்கள் பாகிஸ்தானில்  ரிசல்பூரில்  அமைந்துள்ள விமானப்படை  கல்விப் பீடத்தில் பைலட் அதிகாரிகள் 1987 ஜனவரி 2 ஆம் திகதி பதவிப்பிரமாண பெற்றார்

ஆரம்பத்தில் இலங்கையில் ஒரு மறுமலர்ச்சி விமானியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் இலங்கையின் சூப்பர்சோனிக் விமானம் மற்றும் இலகுரக விமானம் என்பவற்றின் விமானி ஆகவும் அதிவேக ஜெட் விமானங்களை இயக்கும் இலங்கையின் முதலாவது விமானி ஆகவும் அவர் காணப்பட்டார்.

 மேலும் அவர் இலக்கம் 5 தாக்குதல் மற்றும் இலக்கம் 10 தாக்குதல் படைபிரிவும் ஆகியவற்றின் கட்டளை அதிகாரியாகவும்  செய்யப்பட்டார் இந்தப் படைப்பிரிவுகபீர் சீ 2/சீ 7 விமானங்கள் என்பன உள்ளடங்க பட்டன.  

 எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் ஒரு சிறந்த விமானி ஆகவும் விமானி பயிற்றுனர் ஆகவும் செய்யப்பட்டார் மேலும் அவர்  கபீர் மற்றும் கே 7 விமானங்கள் உள்ளடங்கலாக 10 விமானங்கள் மூலம் சுமார் 3500 மணித்தியாலம் விமானியாக பறந்து செயற்பட்டுள்ளார்

மேலும் விசேடம் என்னவென்றால் அவர் வர்த்தக  விமானிகாண இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதி பத்திரத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எயார் மார்ஷல் பதிரன  அவர்கள் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில்  ஜூனியர் கட்டளை பயிற்சி பாடநெறியையும் பரதேசியில் அமைந்துள்ள வான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி யின் பயிற்சி நெறியையும்  அமெரிக்க விமானப்படையின்  விமான  பல்கலைக் கழகத்தில் செயற்பாட்டு கலை மற்றும் அறிவியல் மதிப்புமிக்க முதுநிலை பட்டம் பெற்ற  இலங்கை விமானப்படையின் முதல் விமானப்படை அதிகாரி ஆவார்.

 2004 ஆம் ஆண்டு ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட  நிர்வாகத்தின் தனது இரண்டாவது முதுகலைப்பட்டம் ( பாதுகாப்பு ஆய்வுகள்) தொடர்பாக வெற்றிகரமாக நிறைவு செய்தார் அந்த பயிற்சியிலும் அவர் முதல் அது அதிகாரியாக  தெரிவு செய்யப்பட்டார் அதனைத் தொடர்ந்து இந்தியாவின் புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயின்றார் இதன்போது என் டி சி  என்ற பட்டம் அவருக்கு கிடைக்கப்பெற்றது  மேலும்2012ம் ஆண்டு  சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

எயார் மார்ஷல் பத்திரன அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு விசிஷ்ட சேவா விபூசன மற்றும் உத்தம் சேவா பதக்கம் என்பன வழங்கப்பட்டது மேலும் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர் ஆற்றிய சேவைக்காக ஒட்டு சந்தர்ப்பங்களில்  அவருக்கு துணிச்சலான பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன அதாவது வீர விக்ரம விபூசண,  இரண்டு தடவை, ரண விக்ரம பதக்கம் இரண்டு தடவை, ராணி சூழ பதக்கம் நான்கு முறையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எயார் மார்ஷல் பத்திரன அவர்கள் அதன் பின்பு மூன்று பிரதான விமானப்படை தளங்களுக்கு கட்டளை அதிகாரியாக செயற்பட்டார்  மேலும் விமானப்படை கல்வி பீடத்தின் பீடாதிபதி ஆகவும் செயல்பட்டார் அதனைத் தொடர்ந்து விமானம் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை விமானப்படை நிர்வாக பணிப்பாளராக செயற்பட்டார் அதன்பிறகு 2019 ஆம் ஆண்டின் விமானப்படை தலைமை தளபதியாக பதவி உயர்வும்  பெற்றார் தற்போது 2020 நவம்பர்ப்பி  ம் திகதி  அவர் விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை