விமானப்படை சேவாவனிதா பிரிவினால் " குவன் மிதுதாம் " திட்டம் அனுராதபுரம் , மற்றும் வவுனியா விமானப்படை தளங்களில் ஆரம்பம்.
10:34am on Sunday 20th June 2021
அனைத்து விமானப்படை தளங்களையும் ஒருங்கிணைத்து நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை  வலுப்படுத்தும் நோக்கில் விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கடந்த 2021 பெப்ரவரி  09 ம் திகதி அனுராதபுர மற்றும் வவுனியா விமானப்படைத்தளங்களில் '' குவன் மிதுதம்'' அபிவிருத்தி திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .சார்மினி பத்திரன அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம்கள் அனைத்தும் விமானப்படை தளங்களையும் இணைத்து ஆரம்ப கட்டமாக அனுராதபுர மற்றும் வவுனியா விமானப்படைத்தளங்கள்   இணைந்தன.

இதன் முதல் கட்டமாக அனுராதபுர குடாப்பளுக்கொல்லாவ  பிரதேச வாசிகளுக்கு குடிநீர் வசதிகள் மற்றும் குளியலறைகல் , மற்றும்  குழாய் கிணறுகள் நிரமணித்து கையளிக்கப்பட்டது  சேவா வனிதா பிரிவின் தலைவலி அவர்களினால்  இவை பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனுராதபுர விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  திஸாநாயக்க அவர்களும் கலந்துகொண்டு இருந்தார்.

மேலும் அன்றய தினம்  வவுனியா விமானப்படை தளத்துடன் இணைந்து  05 கட்டடங்கள் மற்றும் அலக்லா வித்தியாலயத்தில்  சிறுவர் பூங்காவும்  குவன்  மிதுதம்  திட்டத்தின்கீழ் புனர்நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது மேலும் தமிழ் சிங்கள  மாணவர்களுக்கு  பயன்பெறும் வகையில்137 நூல்கள் நூலகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த திட்டம்கள் வவுனியா விமானப்படைத்தள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  தேசப்பிரிய சில்வா அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றன.

SLAF Base Anuradhapura

SLAF Base Vavuniya
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை