இலங்கை விமானப்படை தளபாட வளங்கள் பணிப்பாளராக கடமையாற்றிய எயார் வைஸ் மார்ஷல் பிரியந்த வீரசிங்க அவர்கள் விமானப்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
10:52am on Sunday 20th June 2021
எயார் வைஸ் மார்ஷல் பிரியந்த வீரசிங்க அவர்கள் விமானப்படையின் 32 வருட மகத்தான  சேவையில் இருந்து கடந்த 2021 பெப்ரவரி 03 ம் திகதி  ஓய்வுபெற்றார்   விமானப்படைத்தளபதி   எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களினால்  தனது காரியாலயத்தில் நினைவுச்சின்னம்  வழங்கி  கௌரவத்துடன்  வழியனுப்பி வைக்கப்பட்டார்  

மேலும்  நாட்டிற்காக  அர்ப்பணிப்புடன்  செயற்பட்டதை பாராட்டிய விமானப்படை தளபதி அவர்கள் அவரின் மகத்தான சேவையினையும்  நினைவுபடுத்தினார். மேலும் அதனைத்தொடர்ந்து எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்களுக்கு  விமானப்படை வர்ண அணிவகுப்பு பிரிவினால்  அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மேலும் அதனைத்தொடர்ந்து எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்களுக்கு  விமானப்படை வர்ண அணிவகுப்பு பிரிவினால்  அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க  அவர்கள் கொழும்பு  ஆனந்த கல்லூரியில் கல்விபயின்றார் மேலும் அவர் ஜான் கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 1987ம் ஆண்டு  ஜூலை 21  ம் திகதி இணைந்த அவர்  1989 ம் ஆண்டு ஜூன் 23 ம் திகதி விமானப்படை தளபாடங்கள் பிரிவில்  பைலெட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விமானப்படை தொழிமுறை வாழ்க்கையில்  அவர் பல நியமங்களை வகித்துள்ளார் . கட்டளை  கொள்முதல் கட்டளை அதிகாரியாகவும் , வழங்கல் மற்றும் பராமரிப்பு தொகுதியின் கட்டளை அதிகாரியாகவும் , விமானப்படை வரவுசெலவு பணிப்பாளராகவும் , விமானப்படை நலன்புரி திட்ட பணிப்பாளராகவும் , விமானப்படை பயிற்ச்சி  பிரிவு பணிப்பாளராகவும் , இறுதியாக தளபாட வளங்கள் பணிப்பாளராகவும்  பணிபுரிந்தார் .

எயார்  வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்கள்  1996 முதல் 2001 வரை செயல்பாட்டு ஹெலிகாப்டர் விமானியாகவும் பணியாற்றினார், இதன்போது  அவர் பெல் 206, பெல் 212 மற்றும் எம் ஐ  17 ரக ஹெலிகாப்டர்களை செலுத்தி இருந்தார்.

மேலும் விமானப்படை மல்யுத்த விளையாட்டு பிரிவின்  தலைவராகவும் இருந்தார். மேலும் விமானப்படை மல்யுத்த விளையாட்டு பிரிவின்  தலைவராகவும் இருந்தார். மேலதிக விபரங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை