இலங்கை விமானப்படையின் 07வது " குவான் மீதுதகம் '' வான் நட்பு திட்டம் ரத்மலானவில்
3:39pm on Sunday 12th December 2021
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தளங்களில் அருகாமையில் வசித்துவரும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை மேன்படுத்தும் திட்டமான " குவான் மீதுதகம்  " திட்டத்தின்கீழ் ரத்மலான   விமானப்படை தளத்தை அண்டி அமைந்துள்ள குத்தலாவலபுர மஹாவித்தியாலயத்திற்கு  நூலக கட்டிடம்  புணராநிர்மாணம் செய்து  கடந்த 2021 ஏப்ரல் 22ம்  திகதி   விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது இதன்போது புத்தகம்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது .

சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன  அவர்களின் ஆலோசனைப்படி ரத்மலான விமானப்படை தள  கட்டளை அதிகாரி   எயர் கொமடோர் தம்மிக டயஸ் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இந்த வேலைத்திட்டம்கள் இடம்பெற்றது.
இந்த பாடசாலையில் சுமார் 1000 மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர் இந்த நூலகம் சேதமடைந்து காணப்பட்டதால்    மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் மேசை, நாற்காலிகள் போன்ற வசதிகளுடன் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் விமானப்படை  தரைவழி செயற்பட்டு பணிப்பாளரின் மனைவி  திருமதி ரோஸி லாப்ரோய்   விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பளார் அவர்களின் துணைவி திருமதி நிரோதா தென்னகோன்  மற்றும்   சீனவராய   விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது  விமானப்படை விமான  பொறியியல்  பணிப்பாளரின் மனைவியான திருமதி ஷர்மிளா  விஜேசூரிய மற்றும் ரத்மலான விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ் மற்றும் ரத்மலான விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரஷோமானி டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை