விமானப்படையின் புதிய கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்
5:36pm on Sunday 12th December 2021
விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுதர்ஷன பத்திரன   அவர்களினால் முன்னிலையில்  புதிய கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக  மாஸ்டர் வாரண்ட் அதிகாரி டி.டி.ஏ.பி திஸாநாயக்க அவர்கள் கடந்த 2021ஜூன் 01ம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார்.

விமானப்படையின்  முன்னாள்   மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான   மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சமரகோன்   அவர்கள் சேவையில்  ஓய்வு  பெறுவதை அடுத்து அவர்  தனது பொறுப்புக்களைபுதிதாக நியமிக்கப்பட்ட மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான டி.டி.ஏ.பி திஸாநாயக்க  அவரக்ளிடன்  உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் அணிவகுப்பு மூலம்  கையழியத்தார்

மாஸ்டர் வாரண்ட் அதிகாரியான ஸ்.எம்.என்.பி சமரகோன் அவர்கள்  கடந்த 2000 ஜனவரி 10ம் திகதி  விமானப்படையில் விமான மின்னியல்  பிரிவில்  இணைந்துகொண்டார்.  அவர் விமானப்படையின் எம் ஐ  17 எம் ஐ  24 ஆகிய ஹெலிகொப்டர்களின் மின்னியல் தொடர்பான மாஸ்டர் பயிற்றுவிப்பாளராகவும்   அவர்  ஏக்கல விமானப்படை தளத்தின் பயிற்ச்சி பாடசாலையில்  பிராதன   வாரண்ட் அதிகாரியாகவும்  நியமிக்கப்பட்டு இருந்தார்  தற்போது அவர் விமானப்படையின் கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாக  நியமனம் பெற்றுள்ளார்.
கட்டளை மாஸ்டர் வாரண்ட் அதிகாரி நியமனம் ஆனது   முன்னால் விமானப்படை தளபதி எயார் ஷீப்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால்  சாதாரண நிலையில் உள்ள படைவீரர்கள்  மற்றும் விமானப்படை சிவில் ஊழியர்களின்  தேவைகளை நேரடியாக கண்காணிக்க நியமிக்க ஒரு மூத்த  நிலையாக இது இருந்தது .

இந்த நியமனம்  கடந்த 2017  ஜூலை 12 ம் திகதியே  விமானப்படைக்கு அறிமுகம் செய்யப்பட்டது  இதன் மூலம் நீராடிய அவர்  தளபதியிடம்  கலந்துரையாடி அவரக்ளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்பதற்கு  இலகுவாக  இருக்கும் என்ற காரணத்தினால் இந்த நியமனம் உருவாக்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை