இலங்கை விமானப்படையின் 33வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் அகங்கமவில்
10:54am on Thursday 23rd June 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொக்கல  விமானப்படை தளத்தின் மூலம்அஹங்கம, கோரஹெதிகொட சுனாமி கிராமத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  

கொக்கல விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் திலின ராஜபக்ஷவினால் புனரமைக்கப்பட்ட நீர்த்திட்டம் கோரஹெதிகொட சுனாமி கிராமத்தில் வசிப்பவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கரஹெதிகொட சமூக நீர்த் திட்டம் 2008 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்த முடியாத நிலை காரணமாக கைவிடப்பட்டதுடன், கிராம மக்கள் அன்றாடம் நுகர்வதற்கு நீரைப் பெறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கொக்கலா விமானப்படை நிலையம் கூட்டு முயற்சியில் ஈடுபட்டன. குறிப்பிட்ட புனரமைப்புத் திட்டம்மூலம்  35 வரிய குடும்பங்களின் தண்ணீர் தேவையை நிவர்த்திசெய்ய முடிந்தது

இந்த திட்டத்திற்கான நிதியுதவிகள் சேவா வனிதா பிரிவு மற்றும் கொக்கல   விமானப்படை தளம் ஆகியவற்றின்மூலம்  வழங்கிவைக்கபட்டயது இந்த நிகழ்வில் கொக்கல  விமானப்படையின் கட்டளை அதிகாரி, ஹபராதுவ பிரதேச செயலாளர், கொரஹெதிகொட பிரதேச கிராம உத்தியோகத்தர், கொக்கல விமானப்படை நிலையத்தின்  அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை