கூரகள ரஜமஹா விகாரையின் கட்டுமானப்பணிகள் மற்றும் வெசக்தின நிகழ்வுகள் கொண்டாடபட்டது
2:42pm on Thursday 23rd June 2022
குரகல ரஜமஹா விகாரை என்று அழைக்கப்படும் ஒரு புராதன புத்த மடாலயம் 2300 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் பாரம்பரியத்தை சித்தரிக்கும் தொல்பொருள் மதிப்புடைய இந்த பௌத்த சமய தளம் மற்றும் விமானப்படையினர் இணைந்து கடந்த 2022 மே 17 ம்  திகதி கோவில் வளாகத்தில் புதிய கட்டுமானங்களின் திறப்பு விழா மற்றும் மாநில வெசாக் மத கொண்டாட்டம்களில்    பெருமையுடன் இணைந்தனர்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டுதலின் கீழ் அன்னதானம், 'கிலான்பாச' பூஜை, வெசாக் கூடுகள் வெஸ்க் விளக்குகள்  என்பன அலங்கரிக்கப்பட்டு புனிதமான நிகழ்வுக்கு.விமானப்படையினர் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
 
இந்நிகழ்வில் நலன்புரி பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி  குரூப் கேப்டன் எஸ்.டி.களுபோவில, கலைநிகழ்ச்சிகள் பணிப்பாளர் குரூப் கப்டன்   சந்திம, தியத்தலாவ நிலையத்தின் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் என்.ஏ.ஐ.டி சில்வா, அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை