இல 111ஆளில்லா விமான வாகன படைப்பிரிவின் 14 வது வருட நிரவுதினம்.
2:55pm on Thursday 23rd June 2022
வவுனியா விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள இல 111ஆளில்லா விமான வாகன படைப்பிரிவின் 14 வது  வருட நிரவுதினம்  கடந்த 2022 ஜூன் 01 ம் திகதி  படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அபயவிக்ரம  அவர்களின்  வழிகாட்டலின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது

1996 ம் ஆண்டு  இல 11 ஆளில்லா விமான படைப்பிரிவு  ஹிங்குரகோட விமானப்படை தளத்தில்  பிளைட் லேப்ட்டினால் தலக அவர்களின் தலைமையில்  ஆளில்லா விமானங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து,  இல  11ம்  படைப்பிரிவாக உயர்த்தப்பட்டு வவுனியா விமானப்படை தளத்தில் மீண்டும் நிறுவப்பட்டது.

"மனிதாபிமான நடவடிக்கையின்" போது, எண் 111 UAV படைப்பிரிவு அதன் சர்ச்சர் எம்கே II ஆளில்லா வான்வழி வாகனங்களை எல்.டீ டீ ஈ  கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில் நிகழ்நேர புலனாய்வு சேகரிப்பு மற்றும் முப்படைகளின் கண்காணிப்பு தேவைகளை பூர்த்தி செய்து, வெற்றிக்கு பங்களித்த ஒரு முக்கிய பங்குதாரராக காணப்பட்டது

தற்போது,ஆளில்லா விமான  தொழில்நுட்பத்தை வெற்றிகரமான அளவில் ஆராய்ந்து அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப பங்களிப்பை மேம்படுத்துவதற்காக லிஹினியா நாட்டுடன் இணைந்து  ஆளில்லா விமானங்களை இயக்கிவருகின்றது என்பது குறிப்பித்தக்கதாகும்

மேலும், படைப்பிரிவின் செயற்பாட்டுத் திறனை விரிவுபடுத்தும் வகையில், அண்மையில் இலக்கம் 111 ஆளில்லா வான்வழி வாகனப் படைப்பிரிவு ஆளில்லா விமானப்படையானது கட்டுகுருந்த விமானப்படை நிலையத்தில்  கடந்த 2022 பிப்ரவரி 08ம் திகதி அதன் கட்டளையின்கீழ் DJI Matrice-300, DJI Mavic 2 Enterprise Dual, Patom 4 Pro+ ட்ரோன்களை இயக்குகிறது.

மேலும் தேசத்தின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த குறுகிய தூர, நிகழ் நேர உளவுத்துறை சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 13 விமானப்படை தளங்களில் நிறுவனங்களில் ட்ரோன் குழுக்கள் நிறுவப்படுள்ளது
இந்த நிகழ்வை முன்னிட்டு இரட்டைப்பெரியகுளம் ஸ்ரீ சைலபிம்பரமாயா கோவிலில் அனைத்து அதிகாரிகள், விமானப்படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் "சிரமதான" வேலைகள் நடத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை