இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விமானப்படை வீராங்கனை சாதனை.

2011-05-17 12:15:26
மகளிர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விமானப்படை வீராங்கனை சாதனை.
இலங்கை விமானப்படையின் கிரிக்கெட் வீராங்கனை சமரி அதபத்து 2011 பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுடன் பங்குபற்றிய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது , அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 16 நான்கு ஓட்டங்கள்,1 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக சதத்தினை பெற்று இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு பெருமை சேர்த்தார்.

மேலும் இவர் தனது முன்னைய 88 ஓட்டங்கள் என்ற சாதனையை முறையடித்து இச்சதத்தினை பெற்றுக்கொண்ட அதேநேரம் இவர் 2010ம் ஆண்டு இலங்கை விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணியில் இடதுகை துடுப்பாட்ட வீராங்கனையாக இணைந்து கொண்டதுடன் , தேசிய மகளிர் அணிக்காகவும் விளையாடி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவர் குருனாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் கல்வி பயின்றதுடன் ,குருனாகல்  "கோல்ட்ஸ்' கழகத்துக்காகவும் விளையாடிய அதேநேரம் தேசிய அணிக்காக பல்வேறு வெளிநாட்டு சுற்றுப்போட்டியில் விளையாடியதுடன், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமையும் விஷேட அம்சமாகும்.join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை