இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

அம்பெய்யும் போட்டி.

2011-05-23 14:39:09
அம்பெய்யும் போட்டி.
கடந்த 08,09,11ம் திகதிகளில் சுகததாஸ வெளியக  விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற உலக சாம்பியன் அம்பெய்யும் போட்டிக்கான தெரிவுப் போட்டியில் இலங்கை விமானப்படையின் ஆண்,பெண் வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.

எனவே இங்கு விமானப்படையின் நிபுன செனவிரத்ன ,டில்கார சல்காது ஆகியோர் கடந்த 3 நாட்களாக திறமையாக விளையாடி முறையே 1233,1248,1264 மற்றும் 1288,1270,1260, எனும்  புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன்  ,இது இவர்களுக்கு இத்தாலியில் இடம்பெறவிருக்கும் உலக சாம்பியன் போட்டிகளில் பங்குபற்ற தேவையான 1230 எனும் தகைமை புள்ளிகளுக்கு மேலதிகமாக இறுந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இத்தெரிவுப்போட்டியின் போது விமானப்படையின் டில்கார சல்காது இத்தேசிய சாதனையை "பீடா" நிகழ்ச்சிப்பிரிவின் கீழ் 70 M ,60 M,50 M,களில் அவரது முன்னைய சொந்த சாதனையை முறையடித்து பெற்றுக்கொண்ட  அதேநேரம்  60 Mல் கொழும்பு ஈட்டி எரிதல் கழகத்தின்  துலிது சில்வாவின் சாதனையை முறையடித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்..

சாதனை விபரங்கள்.
70 M -  315 புள்ளிகள் (முன்னைய சாதனை 308 புள்ளிகள்)
60 M -  318 புள்ளிகள் ( முனனைய சாதனை 309 புள்ளிகள்)
50M  -  327 புள்ளிகள்( முன்னைய சாதனை 312 புள்ளிகள்)
30M  -  339 புள்ளிகள்( முன்னைய சாதனை 338 புள்ளிகள்)
"பீடா" சாதனை 1288 புள்ளிகள் (முன்னைய சாதனை 1249 புள்ளிகள்)

join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை