இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

மெய்வல்லுனர் பயிற்ச்சியாளர்கள் விமானப்படையினால் பாரட்டப்பட்டனர்

2011-08-04 10:58:59
மெய்வல்லுனர் பயிற்ச்சியாளர்கள் விமானப்படையினால் பாரட்டப்பட்டனர்
மெய்வல்லுனர் பயிற்ச்சியாளர்கள் இலங்கை விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் கடந்த 02.08.2011ம் திகதியன்று விமானப்படை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற விழாவில் வைத்து பாராட்டப்பட்டனர்.

எனவே இங்கு சுமார் 26 பயிற்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது மாணவர்களும் கலந்துகொண்ட அதேநேரம் இங்கு விழாவினை  ஆரம்பிக்க விமானப்படை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் அஜித் அபேசேகர வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன்  அதனைத்தொடர்ந்து விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் இவ்வாறு மெய்வல்லுனர் போட்டிகளை விருத்தி செய்வது விமானப்படைக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் என்பதோடு விமானப்படை இதற்கு மேலும் வலு சேர்க்கும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு விமானப்படைத்தளபதி இறுதியாக பயிற்றுவிப்பாளர்களுக்கு சான்றிதல்களை வழங்கியதோடு ,விளையாட்டு வீரர்களுக்கு  போஷனை பொருட்கள்,காலணிகள் என்பவற்றையும் வழங்கியமை விஷேட அம்சமாகும்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை