இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கடுகுருந்த விமானப்படை முகாமின் 28வது நிறைவாண்டு விழா

2012-11-21 13:51:49
கடுகுருந்த விமானப்படை முகாமின் 28வது நிறைவாண்டு விழா
கடுகுருந்த விமானப்படை முகாமின் 28வது நிறைவாண்டு விழா கடந்த நவம்பர் 16ம் திகதியன்று முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' டி.எஸ்.எச். அமரசிங்க அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு அலுத்கம கலாவில விஸ்வ புத்த மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் விஷாகா பெண்கள் அனாதை குழந்தைகளுக்கு உள்நாட்டு பைலட் பயிற்சி விமானம் பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை