58வது தேசிய பூப்பந்தாட்டப்போட்டி (Badminton).
Published on: 2011-01-25 19:31:09
58வது தேசிய பூப்பந்தாட்டப்போட்டி 2011-01-23ம்
திகதியன்று றோயல்கல்லூரி விளையாட்டு அரங்கத்தில்
நடைப்பெற்றது.
மேலும் போட்டியானது ஒற்றையர்,
இரட்டையர், எனும் இரு பிரிவுகளாக இடம்பெற்றதுடன் ஒற்றையர் பிரிவில் சுமார்
70 போட்டியாளர்கள் பங்குபற்றிய அதேநேரம் இரட்டையர் பிரிவில் சுமார் 40
ஜோடிகள் பங்குபற்றினர்.
எனவே ஆண்களுக்கான இரட்டையர்
பிரிவில் விமானப்படையின் மதுஷன்க R.S.K. மற்றும் R.S. தகனாயக ஜோடி,
கடற்படையின் நுவன் ஹெட்டியாரச்சி மற்றும் கசித சானக ஜோடியை தோற்கடித்து
போட்டியினை வென்றதோடு, ஒற்றைய பிரிவில் தினூக கருணாரத்ன
வெற்றியீட்டியதுடன், விமானப்படையின் AC பெர்னான்டு இரண்டாம் இடத்தினை
பெற்றுக்கொண்டார்.
அத்தோடு போட்டியின் பிரதம அதிதியாக
விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. மகிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்டமை
விஷேட அம்சமாகும்.