2020 ம் ஆண்டுக்கான IPSC தரைந்த துப்பாக்கி சூட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை வீரர்களின் சிறந்த செயல்திறன்.
12:51pm on Thursday 22nd October 2020
கந்துரட்ட  துப்பாக்கி  சூடு  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி சூடு போட்டிகள் கடந்து 2020 அக்டோபர் மாதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கந்தானை துப்பாக்கி சூடு மைதானத்தில் இடம்பெற்றது.

 2020 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி சூட்டு போட்டிகள் ஆனது சர்வதேச ரீதியில் மூன்றாம் நிலையாக அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் ஆகும் இந்த போட்டிகள் மூலம் 2021 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள சர்வதேச துப்பாக்கிச்சூட்டு போட்டிகளுக்கான போட்டியாளர்களை தெரிவு செய்யும் ஒரு போட்டியும் ஆகும்

 இந்தப் போட்டிகளில் 16 அணிகள் கொண்ட 183 போட்டியாளர்கள் பங்குபற்றினர் இதில் இலங்கை இராணுவப் படை இலங்கை கடற்படை இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை போலீஸ் படை பிரிவு என்பன பங்குபற்றினர்

 இந்த போட்டிகளில் விமானப்படை சார்பாக ஒரு அதிகாரியும் 14 விமானப்படை வீரர்களும் 5 விமானப்படை வீராங்கனைகளும் கலந்து கொண்டனர் இதன்போது மூன்று பிரிவுகளில் 27 போட்டிகளில் பங்கேற்று பதினொரு தங்கப்பதக்கம் ஒன்பது வெள்ளிப்பதக்கம் 7 வெண்கலப்பதக்கம் என்பவற்றை வெற்றி பெற்றனர்

இறுதியில் வெற்றியாளர் களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் மேலும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களும் இலங்கை தேசிய துப்பாக்கி சூடு சம்மேளன தலைவரும் இலங்கை விமானப்படை துப்பாக்கி சூடு பிரிவின் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் ஜானக அமரசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2020 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved