எயார் மார்ஷல் கபில ஜயம்பதி
Commander of the Sri Lanka Air Forceஎயார் மார்ஷல் கபில ஜயம்பதி
WWV, RWP, RSP and three Bars, VSV, USP, MSc (Int Rel), MMSc (Strat Stu-China), MIM (SL), fndu (China), qhi

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி 1982 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை விமானப் படையில் 10 ஆம் இலக்க கெடெட் அதிகாரி கற்கை நெறியில் பொதுக் கடமை பிரிவின் அதிபாரியாக இணைந்துக் கொண்டுள்ளதுடன் அடிப்படை தாக்குதல் பயிற்சி அடிப்படை பறக்கும் பயிற்சி கற்கை மற்றும் ஹெலிகொப்டர்களில் பயணிக்கும் உயர் பயிற்சி போன்ற தனது ஆரம்ப பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

அவர் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி பைலட் அதிகாரியாக வெளியேறியூள்ளார். கொமிஷன் அதிகாரியாக பாதுகாப்பு துறையில் தனது சேவையை ஆரம்பித்த இவர் தனது சேவை காலங்களுக்குள் பின்வரும் மிகமுக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

1985 முதல் 1990 வரையான காலப்பகுதிக்குள் அவர் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் 04ஆம் இலக்க ஹெலிகொப்டர் படையணியில் சேவையாற்றி வந்ததுடன் அங்கு அவர் ஹெலிகொப்டர் பைலட் இயந்திர துறை நிபுணர் திகழ்ந்ததுடன் தகுதி அங்கீகாரம் மற்றும் ஏ 2 தர ஹெலிகொப்டர் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன் புதிதாக வருபவர்களுக்கு ஹெலிகொப்டர் பயிற்சிகளை பயிற்றுவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் 04 ஆம் இலக்க ஹெலிகொப்டர் படையணியில் சேவையாற்றும் காலகட்டத்தில் மிகவூம் திறமையான இளம் பயிற்று விப்பாளராக திகழ்ந்தார். படையணியின் பயிற்சி அதிகாரியாக செயற்பட்டு வந்த அதேசமயம், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முன்னேறிச் செல்லும் தரைப்படையினருக்கு தேவையான விமான சேவைகளையூம் வழங்கி வந்துள்ளார். 04 ஆம் இலக்க படையணியில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது 1986 ஆம் ஆண்டில் “பிளையிங்  அதிகாரி” யாகவூம் 1989ஆம் ஆண்டு “பிளைட் லெப்டினன்ட்” ஆகவூம் தரம் உயர்வூ பெற்றார். 1990 ஆம் ஆண்டு விமான ஓட்டுநர் கடமையிலிருந்து விடுபட்டு விமானப் படைத் தலைமையகத்தின்  விமானப்படையின் பயிற்சி பணிப்பாளராகவூம் பதவி நிலை அதிகாரி என்ற பொறுப்பையூம் ஏற்றுக் கொண்டார். 1991ஆம் ஆண்டு மீண்டும் 04ஆம் இலக்க ஹெலிகொப்டர் படையணியிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற அவர் அங்கு பயிற்சி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளராக செயற்பட்டார்.  அதிவிஷேட, விஷேட பிரமுகர் ஹெலிகொப்டர் நடவடிக்கை விமானி அங்கீகாரமும் தரம் பெற்ற ஹெலிகொப்டர் பயிற்றுவிப்பாளர் என்ற அடிப்படையில் பூரண ஒத்தழைப்பை வழங்கி வந்தார்.

1993 ஆம் ஆண்டு “ஸ்கொட்ரன் லீடர்” தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார். அவர் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி ஹிகுரக்கொடை விமானப்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 07 வது ஹெலிகாப்டர் படையணியின் கட்டளை அதிகாரியாக நியமனம்பெற்றார். 1996 ஆம் ஆண்டு இவர் “விங் கமாண்டர்” ஆக தரமுயர்த்தப்பட்டதுடன் விமானப்படை தலைமையகம் நடவடிக்கை பணிப்பாளரின் நடவடிக்கை அதிகாரி 1 என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த காலகட்டத்தில் விமானப் படையின் அனைத்து விமானங்களின் விமான பயணங்கள் தொடர்பான சகல பொறுப்புக்களையூம் ஏற்று செயற்பட்டார். பின்னர் அவர் வவூனியா விமானபப்டை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ரஷ்யா தயாரிப்பு எம்.ஐ-17  போக்குவரத்து ஹெலிகாப்டர் உட்பட  06 ஆம் இலக்க படையணியின் கட்டளை அதிதியாக 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றார். இங்கு அவர் தனது பொறுப்புக்களுக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் மூலம் திறமைகளை காண்பித்து வந்ததுடன் “குருப் கெப்டன்” தரத்திற்கு  பதவி உயர்வூ பெற்றார்.

2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி ஹிங்குரங்கொடை விமானப் படைத் தளத்தின் கட்டளை அதிதியாக கடமைகளை பொறுப்பேற்றார். இதற்கமைய அவரது கட்டளையின் கீழ் விமானப்படையின் இரு முக்கிய ஹெலிகாப்டர் படையணி வழிநடத்தப்பட்டன. கட்டளை அதிகாரியாக செயற்பட்ட போதிலும்  விமான பயிற்சியி நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்புக்களை வழங்கிவந்தார். அத்துடன் அடிப்படை பாதுகாப்பு மற்றும் மீட்பு விமானம் படையணியை ஸ்தாபிப்பதில் முன்னோடியாக இருந்தார். தற்பொழுது அந்த படையணி விஷேடப் படை என அழைக்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை பொறுப்பேற்றார். புலிகளை தோல்வியடைய செய்வதற்காக பாகிஸ்தானிடமிருந்து இராணுவ தளபாடங்கள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள இந்த பதவி முக்கிய பங்களிப்புக்களை வகித்தது. 2007 ஆம் ஆணடு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி அவர் எயார் கொமடோர் தரத்திற்கு பதவி உயர்வூ பெற்றார். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாக்கிஸ்தான் இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து மீள அழைக்கப்பட்டார்.

பாக்கிஸ்தான் இருந்து நாடு திரும்பிய அவர் விமானப்படையின் மிகப்பெரிய விஷாலமான விமானப்படை தளமான கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கட்டுநாயக விமானப்படை தளமானது 24 படையணிகளையூம் மேலும் பல விமான  பிரிவூகளையூம் கொண்டது. இந்த கால கட்டம் புலிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக காணப்பட்டதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த தேவைப்பட்டதனால் மேற்படி விமான நிலையத்தின்  தகுதிகான் அதிகாரியாக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். இவர் இந்த பொறுப்பு வகித்த காலப்பகுதியிலேயே இலங்கையில் 15வது சார்க் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 7 நாடுகளின் அரச தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டதனால் இந்த மாநாட்டின் பாதுகாப்புக்கான பிரதான பாதுகாப்பு இணைப்பாளராக பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டார். இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

2008 / 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைநெறியை மேற்கொண்டார். மேற்படி பல்கலைகழகத்தில் குறித்த கற்கைநெறியை மேற்கொண்ட முதல் இலங்கை விமானப்படை அதிகாரி இவராவார். அவர் நிறம் மற்றும் விருதுகளுடன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் 2009 ஆம் ஆண்டு “எயார் வைஸ் மார்ஷல்” தரத்திற்கு பதவி உயர்வூ பெற்றார். அவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் விமானப்படையின் சீனக்குடா தளத்தின் கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சீனக்குடா விமானப்படை தளம் விமானப்படையின் முதல் அகாடமியாக மாற்றப்பட்டது. அகாடமியாக மாற்றப்பட்ட பின்னர் அவர்கள் முதல் கொமடாண்ட் ஆக நியமிக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி விமானப்படை பொருட்கள் விநியோக பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்கு மேலதிகமாக 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி விமானப்படையின் வான் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராகவூம் பொறுப்பேற்றுக் கொண்டார். விமானப் படையில் ஓரே தடவைகளில் இரு வேறு பதவிகள் வகித்த முதலாவது அதிகாரி இவராவார். 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி விமானப் படையின் வான் நடவடிக்கை பணிப்பாளர் பதவி வகித்து வந்தார். 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் விமானப்படையின் சிரேஷ்ட ஹெலிகொப்டர் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவர் சேவையை வாழ்க்கை படிப்பு பாடநெறிகள்


•    1986 ஆம் ஆண்டில் அமெரிக்கா டெக்சாஸ்வில் டெக்ஸ்ட்ரோன்னில் பெல் ஹெலிகாப்டர் பாடநெறி
•    இந்திய விமானப் படையின் கூட்டு விமானம் பயிற்சி பாடநெறி - 1992
•    பாக்கிஸ்தான் விமானப்படை ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி - 1992
• ஐக்கிய இராஜ்யத்தின் குரொன்வெல் ரோயல் இலங்கை விமானப்படை விமான   சேவையாளர்கள்    ஆலோசகர் பாடநெறி - 1996
•    தாய்லாந்து பெங்கொக் பாதுகாப்பு வள முகாமைத்துவ பாடநெறி - 1997
•    அமெரிக்கா  குவாமில்  விமானம் தொடர்பான மாநாடு – 1998
•    தாய்லாந்து பென்கொக் கோப்ரா கோல்ட் கூட்டுப்பயிற்சி – 2001
•    அமெரிக்காவில் கலிபோர்னியா மொண்டேரேரியில் கடற்படை முதுகலை பள்ளி பாதுகாப்பு வள முகாமைத்துவ பாடநெறி – 2004
•    2008/82009 சீனாவின் தேசிய பாதுகாப்பு பாடநெறி.
•    2007-2008 பாக்கிஸ்தான் பிரஸ்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவூகளில் முதுநிலை பட்டம்
•    2015 இல் அமெரிக்காவில்  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திக் எலுமினா
•    2015 இல் அமெரிக்காவில்  தேசிய பாதுகாப்பு கல்லுரியில் எலுமினா


 

திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை