இலங்கை விமானப்படையின் இலத்திரனியல் மாதிரி ஆகாய விமான பாடசாலையின் ஒத்திகை
6:30pm on Tuesday 22nd February 2011

இலங்கை விமானப்படையின் ஏகல முகாமானது சர்வதேச தரத்திலான இலத்திரனியல் ஆகாய,நீர் மற்றும் தரை மார்க்க வாகன பாடசாலையின் ஒத்திகையினை 19.02.2011ம் திகதியன்று மேற்கொண்டது.

இப்பாடசாலையானது இலங்கை விமானப்படைத்தளபதியும் ,கூட்டுப்படைகளின் பிரதானியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலகவின் திட்டம் மற்றும் கடின முயற்ச்சியினாலும் ,ஏகல முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' A.J. அமரசிங்கவின் ஒத்துழைப்பினாலும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இத்திறப்பு விழாவுக்காக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட அதேநேரம் இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாதிரி இலத்திரனியல் வாகனங்களின் சங்கங்களும் பங்குபற்றியதுடன் ,அவர்களின் காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறான மாதிரி வாகனங்களை தயாரிக்கும் திட்டமானது தற்கால உலகின் பொழுதுபோக்கு மட்டுமல்லாது ,விமானங்கள் உட்பட பல்வேரு வாகனங்களைப்பற்றிய அறிவினையும் ,அனுபவத்தினையும்  அதாவது அதன் பாகங்கள் மற்றும் அதனை பொருத்தும் அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது உண்மையாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை