இலங்கை விமானப்படை ரக்பி அணியின் நியூசிலாந்து பயணம்
10:47am on Monday 21st March 2011
இலங்கை ரக்பி அணி பெப்ரவரி 16 முதல் மார்ச் 5 ம்திகதி வரை நியூசிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்ததுடன் மேலும் அங்கு அவர்கள் அக்லன்ட் றோயல் விமானப்படை முகாமில் இரு போட்டிகளில் விளையாடினர்.

எனவே முதலாவது போட்டியில் முன்னால் பாதுகாப்பு சேவைகள் போட்டியின் வெற்றியாளர்கலான றோயல் நியூசிலாந்து கடற்படையுடன் மோதியதுடன்  மேலும் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக  நியூசிலாந்து பூமிஅதிர்ச்சியில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மாௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளினதும் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் நியூசிலாந்து கடற்படை வீரர்களினால் பாரம்பரிய ஹாகா நிறைவேற்றப்பட்ட அதேநேரம் இலங்கை விமானப்படையனி உயரம் ,நிறை,பருமன், ஆகியவற்றில் நியூசிலாந்து அணியை விடவும் குறைவாக இருந்தாலும் அவ்வணியை 36- 29 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்து 7 புள்ளிகளால் வென்றது.

எனவே இங்கு கோப்ரல் சானக சந்திமால் போட்டியின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டதுடன் AC மலிந்த ஜயசிங்க .AC சானக குணரத்ன AC மிகார விஜேரத்ன .LAC புபுது கொடகொட ,AC மிதுன் கபுகொடகே ,LAC சரித் செனவிரத்ன போன்றோர் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் தமது இரண்டாவது போட்டியில் றோயல் நியூசிலாந்து விமானப்படை அணியிடம் மோதியதோடு போட்டியானது வேனுப்பாய் விமானப்படை முகாமில் இடம்பெற்றது, இங்கு விமானப்படையணி 02 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது எனவே இப்போட்டியில் LAC சுரங்க அருனசாந்த மற்றும் AC. ஜயந்த ரனவீர மற்றும் LAC சரத் செனவிரத்ன ஆகியோர் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் இலங்கை விமானப்படை அணி குர்ஷாதிஸ் மற்றும் புளூஸ் அணியினருக்கு இடையிலான போட்டியை பார்வையிட வாய்ப்பு கிடைத்த அதேநேரம் ,நியூசிலாந்து 7 அணியின் பயிற்றுவிப்பாளர் கோடன் டீஜென்ஸ் மற்றும் 1987- 1990 காலப்பகுதியில் நியூசிலாந்து தேசிய அணியின் தலைவராக செயற்பட்ட  பக் செல்போர்ட் என்பவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இச்சுற்றுப்பயணத்தில் விமானப்படை றக்பி அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி 'எயார் கொமடொர்' விஜித குணரத்ன ,பயிற்றுவிப்பாளர் இம்திஷாம் மரிக்கார்,முகாமையாளர் 'சாஜன்ட்' தம்மிக மெதகெதர உடற்பயிற்ச்சி ஆலோசகர் 'பிளைட் சாஜன்ட்'கபில குனசிங்க மற்றும் 'கோப்ரல்' இர்ஷாத் காதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இங்கு வருகை தந்த நியூசிலாந்து அணியின்  முன்னால் தலைவர் பக் செல்போட் கூறியதாவது நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்தவொரு அணியும் எளிதாக வெள்ள முடியாது என்றும் ஆனால் இலங்கை விமானப்படையணி தமது திறமைகளை வெளிக்காட்டி றோயல் நியூசிலாந்து கடற்படை அணியை வென்றதோடு ,றோயல் நியூசிலாந்து விமானப்படையணிடம் தோற்றாலும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டியமை விஷேட அம்சமாகும் எனக்குறிப்பிட்டார்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை