விமானப்படைத்தளபதிக்கு கொழும்பு றோயல் கல்லூரியின் பாராட்டு விழா
4:56pm on Thursday 31st March 2011
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி ஒன்றியம் ஆகியன இணைந்து புதிதாக பதவியேற்ற இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்களை கௌரவிக்கும் வைபவம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது 29.03.2011ம் திகதியன்று கொழும்பு 07ல் அமைந்துள்ள 'நவ ரங்கஹல' மண்டபத்தில் நடைப்பெற்றது.

எனவே இவ்வாறு றோயல் கல்லூரியில் கல்வி கற்று சமூகத்தில் உயர் பீடத்தில் பணியாற்றும் பழைய மாணவர்களை கௌரவிப்பது றோயல் கல்லூரியின் வழக்கம் என்பதோடு ,இவ்வைபவம் றோயல் கல்லூரியின் தற்போதைய ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது.   இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு றோயல் கல்லூரியானது மாணவர்கள் இவ்வாறு சமூகத்தில் உயர்பீடங்களை வகிப்பதற்கு முன்னுதாரணமாகும் என்பதோடு இங்கு உரையாற்றிய றோயல் கல்லூரியின் அதிபர் திரு. உபாலி குணசேகர அவர்கள் கூறுகையில் புதிதாக நியமிக்கப்பட்ட 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்களைப்பற்றி தான் பெருமைகொள்வதாக குறிப்பிட்டார்.

'எயார் மார்ஷல்'ஹர்ஷ அபேவிக்ரம 1980ம் ஆண்டு இலங்கை விமானப்படையில் ஓர்" கெடெட் "அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் 1982ம் ஆண்டு 'பைலட் ஒபிசராக"நியமிக்கப்பட்டார் மேலும் இவர் லண்டன் "கிங்ஸ் "கல்லூரியின் சர்வேதேச கல்வி பட்டதாரியாக விழங்குவதோடு ஷீமத் ஜோன் கொதலாவல பாதுகாப்பு கல்லூரியின் பட்டதாரியும் ஆவார்.

மேலும் திரு. குணசேகர அவர்கள் கூறுகையில் "எயார் மார்ஷல்"ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் விமானப்படைத்தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக பலாலி விமானப்படைமுகாமின் கட்டளை அதிகாரியாகவும், சீனக்குடா முகாமின் கட்டளை அதிகாரியாகவும் ,அநுராதபுரம் மற்றும் இரத்மலானை முகாமின் கட்டளை அதிகாரியாகவும் ,கிழக்கு வலய கட்டளை அதிகாரியாகவும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் மன்றக் கல்லூரியின் போஷகராகவும் ,வான் தொழிற்பாட்டு பிரிவின் இயக்குனராகவும் செயற்பட்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு றோயல் கல்லூரி ஒன்றியத்தின் செயளாலர்  திரு. மஞ்சு ஆரியரத்ன குறிப்பிடுகையில் 'எயார் மார்ஷல் 'ஹர்ஷ அபேவிக்ரம றோயல் கல்லூரியின் உற்பத்தியென்றும் ,இவர் தாய் நாடு ஈன்றெடுத்த உண்மையான ஓர் பிரஜையென்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை புதிய விமானப்படைத்தளபதிக்கு  தெரிவித்துக்கொள்வதோடு, இவ்வாறானதொரு பதவியை வகித்தமையையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் ,   றோயல் கல்லூரியானது பல்வேறுபட்ட மேலதிக கடமைகளுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் அதாவது கூட்டுகலாசாரம்,கூட்டுஇனம், கூட்டுமதம் என குறிப்பிட்டதோடு,இங்கு "கோல்டன்" பாடலும் பாடப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் தான் இலங்கை விமானப்படையின் 13வது விமானப்படைத்தளபதியாக றோயல் கல்லூரியல் கல்வி கற்காவிடின் நியமிக்கப்பட்டு இருக்கமாட்டேன் என்று குறிப்பிட்ட  அதேநேரம்  'ரத்னசூத்ர' பௌத்த மத போதனைகளின் படி கல்வி பயின்றதனால் இந்நிலையினை அடைந்ததாகவும் ,மேலும் முன்னேற வழிவகுக்கும் என்றும் கூறினார்.

அத்தோடு றோயல் கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவன் தசுன் பெரேரா கூறுகையில் தமது கல்லூரி அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னுதாரணமாகவும்,தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு கல்லூரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் விமானப்படைத்தளபதி பெற்றுக்கொண்ட" ரணவிக்ரம பதக்கம்","ரணசூரபதக்கம்", நீண்டகாலசேவைக்காக வழங்கப்படும் "உத்தம சேவா பதக்கம் "போன்ற பதக்கங்களை  இங்கு நினைவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை