விமானப்படையின் பக்தி கீத இசை நிகழ்ச்சி.
2:42pm on Monday 23rd May 2011
இலங்கை விமானப்படையின் சேவாவனிதா பிரிவானது வெசாக் பண்டிகையை முன்னிட்டு பக்தி கீத நிகழ்வொன்றினை கடந்த 18.05.2011ம் திகதியன்று "றைபல் கிரீன்" மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

எனவே இங்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .அயோமா ராஜபக்ஷ  கலந்து கொண்டதுடன் ,தரைப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மஞ்சுலிகா ஜயசூரிய ,கடற்படை சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி .நிலூகா திஸாநாயக ,பொலிஸ்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .ஆஷா பாலசூரிய உட்பட இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம ,விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .நீலிகா அபேவிக்ரம ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வுகள் சுமார் மு.ப. 18:45 மணியளவில் விமானப்படை தளபதியின் வருகையுடன் ஆரம்பமானதுடன் ,இங்கு  சவ்கஞ்சி அண்ணதானமும் வழங்கப்பட்ட அதேநேரம் வெசாக் அலங்காரங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன .

அத்தோடு பக்தி கீதங்கள் புத்தபெருமானின் வாழ்க்கை வரலாற்றையொட்டியதாக அதிகாரிகள் மற்றும் ஏனைய படை உறுப்பினர்கள் அவர்களது சிறுவர்கள் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் பாடப்பட்டதுடன் ,இதற்கான இசை விமானப்படை இசைக்குழுவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வினை கண்டுகழிக்க பொதுமக்களுக்கும் வாய்ப்பழிக்கப்பட்டதுடன் ,இறுதியாக பங்கு பற்றிய சிறுவர்களுக்கு விமானப்படைத்தளபதியினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை