படைவீரர்களை கௌரவிக்கும் வைபவம்.
4:22pm on Tuesday 31st May 2011
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ சேவை அமைப்பினால் ஏற்பாடு  செய்யப்பட்ட படைவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வானது கடந்த 27.05.2011ம் திகதியன்று இராணுவ ஞாபகர்த்த நிலைய பாராளுமன்ற  மைதானத்தில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,அமைச்சர்கள்,செயளாலர்கள்,முப்படைத்தளபதிகள் உட்பட பொலிஸ் மா அதிபர் என பலரும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

எனவே இங்கு முதலாவதாக தேசிய கீதம் இயற்றப்பட்டதுடன் பின்னர் இராணுவ சேவா சபையின் பிரதம அதிகாரி திருமதி .பத்மா வேத்தவ அவர்கள் உரையாற்றியதை தொடர்ந்து பௌத்தம் , இந்து ,இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மத வழிபாடுகளும் இடம்பெற்ற அதேநேரம் உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு  அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த படை வீரர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத்தொடர்ந்து கௌரவ பிரதமர் DM ஜயரத்ன ,கௌரவ சபாநாயகர்  சமல் ராஜபக்ஷ , ஜனாதிபதியின் செயளாலர் திரு.லலித் வீரதுங்க ,பாதுகாப்பு செயளாலர் திரு. கோத்தாபய ராஜபக்ஷ ,கூட்டுப்படைகளின் பிரதானி "எயார் சீப் மார்ஷல் " ரொஷான் குணதிலக ,தரைப்படை கட்டளைத்தளபதி "லெப்டினென்ட் ஜெனரல்" ஜகத் ஜயசூரிய ,கடற்படை கட்டளைத்தளபதி "வைஸ் அத்மிரால்" சோமதிலக திஸானாயக ,விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு  இந்நிகழ்வுக்கு படைவீரர்களின் பெற்றோர்கள் உட்பட சிறுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் ,இங்கு சிறுவர்களினால் "ஆலோக பூஜாவ" கீதம் இயற்றப்பட்டதைத்தொடர்ந்து  இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை