வருடாந்த முகாம் பரிசோதனை - பெராரு
3:13pm on Thursday 23rd June 2011
பெராரு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையானது, இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் கடந்த 18.06.2011ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை பெராரு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" தீப்தி ரவிஹன்ஷ வரவேற்ற அதேநேரம்  கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன், இச்சன்மானமானது ஒரு சிரேஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரி மற்றும் 4 கனிஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகள் உட்பட மேலும் இரு படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டது.

அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதியினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ரம்பேவெவ விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்ட அதேநேரம் மருந்து மூலிகை பயிற்ச்சி செய்கையும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெராரு விமானப்படை முகாமினில் மேற்கொள்ளப்படும் 2000 தென்னங்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 தென்னங்கன்றுகளும் நடப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலும்  விமானப்படைத்தளபதி நலன்புரி வர்த்தக நிலையம் மற்றும் "குவன் தரு செவன" போன்ற நிலையங்களையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை