மகளிர் உதைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படைக்கு இரண்டாம் இடம்.
9:22am on Thursday 4th August 2011
மகளிர் திறந்த உதைப்பந்தாட்டப்போட்டியில் இலங்கை விமானப்படை முதன்முறையாக இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் போட்டியானது இலங்கை தரைப்படையுடன் பம்பலப்பிடி பொலிஸ் பூங்கா மைதானத்தில் கடந்த 01.08.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

மேலும் விமானப்படையானது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முதற்சுற்றில் மதகம விளையாட்டு கழகத்தினை 8-0 எனும் புள்ளி வித்தியாசத்திலும் ,கண்டி விளையாட்டு கழகத்தினை 5- 1 எனும் புள்ளி வித்தியாசத்தினாலும் வெற்றிபெற்ற அதேநேரம் காலிறுதிப்போட்டியில் குருநாகல் அணியினை 3-0 எனும் புள்ளி வித்தியாசத்திலும் அரையிருதிப்போட்டியில் பொலிஸ் அணியினை 1-0 எனும் புள்ளி வித்தியாசத்தினாலும் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதுடன் இறுதிப்போட்டியில் 1-0 எனும் புள்ளிவித்தியாசத்தினால் தரப்படையிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

எனவே இங்கு பிரதம அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திருமதி. ரஞ்சனி ஜயகொடி ,கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.கிரிஷாந்த பெரேரா ,பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அநுர சில்வா ,மகளிர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் .ஒலீவியா கமகே உட்பட விமானப்படை கால்பந்தாட்ட கழகத்தின் தலைவர் "குறுப்ப்கெப்டென் " சமன் கொடகே என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை