முகாம்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2011
1:40pm on Thursday 4th August 2011
முகாம்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மகளிர் பிரிவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய முகாமும் ஆண்கள் பிரிவில் பலாலி விமானப்படை முகாமும் சாம்பியன் பட்டம் வென்றது.

எனவே இங்கு முதலில் ஆண்கள் பிரிவுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை பலாலி முகாம் மற்றும் கடுநாயக்க முகாம்களுக்கிடையில் நடைப்பெற்றதுடன் இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கடுநாயக்க விமானப்படை முகாமானது 20 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பலாலி அணியினர் 15 ஓவர்கள் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடந்தனர்.

மேலும் இங்கு முதன்முறையாக இடம்பெற்ற பெண்கள் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது சீனக்குடா முகாம் மற்றும் பண்டாரநாயக சர்வதேச விமான நிலைய முகாம்களுக்கிடையில் நடைப்பெற்றதுடன் இதில் பண்டாரநாயக சர்வதேச விமானநிலைய முகாமானது வெற்றியீட்டியது.

எனவே இதன் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதிகளாக இலங்கை கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் சபையின் தலைவர் திரு. பசில் , விமானப்படை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் "எயார் கொமடோர்" சஞ்சக விஜேமான்ன ,பலாலி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப்கெப்டென்" அதுல களுஆரச்சி , இல.27 ரெஜிமென்ட் பிரிவின் கட்டளை அதிகாரி "குறூப்கெப்டென்"  இந்திக வீரரத்ன மற்றும் இலங்கை விமானப்படை கிரிக்கெட் சங்கத்தின் செயளாளர் "விங் கமான்டர்" மிகார பெரேரா என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எனவே இங்கு  விஷேட சன்மானங்கள் வழங்கப்பட்டோர் பின்வருமாரு.

ஆண்கள் பிரிவு.

சிறந்த துடுப்பாட்டக்காரர் - LAC பெர்னான்டு - கடுநாயக்க விமானப்படை முகாம்

சிறந்த பந்துவீச்சாளர்- திரு. சந்திம - பலாலி விமானப்படை முகாம்

போட்டியின் ஆட்ட நாயகன் -  AC சில்வா - பலாலி விமானப்படை முகாம்

போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் - LAC பெர்னான்டு - கடுநாயக்க விமானப்படை முகாம்

மகளிர் பிரிவு.

சிறந்த துடுப்பாட்டக்காரர்- LAC.திலகரத்ன- சீனக்குடா முகாம்

சிறந்த பந்து வீச்சாளர் - AC பெர்னான்டு- சீனக்குடா முகாம்

போட்டியின் ஆட்டநாயகி- AC மதுவந்தி  - பண்டாரநாயக விமானப்படை முகாம்

போட்டியின் தொடர் ஆட்ட நாயகி-  LAC திலகரத்ன - சீனக்குடா முகாம்

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை