இலங்கை இராணுவக் வைத்திய கல்லூரியின் மூன்றாவது வருடாந்த அறிவியல் அமர்வு.
3:30pm on Thursday 18th April 2019
இலங்கையின் இராணுவவைத்திய ஆய்வகக் கல்லூரியின் இரண்டாவது வருடாந்த அறிவியல் அமர்வுகள் 2019  மார்ச் 22 ஆம் திகதி ஈகிள்ஸ் லேக்சைட், ஹோட்டலில்  ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  அரச பாதுகாப்பு  மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சர்  கௌரவ  ருவன் விஜேவர்தன  அவர்கள்  கலந்துகொண்டார்.

பாதுகாப்பு செயலாளர்  திரு.ஹேமசிறி பெர்னாண்டோ  மற்றும் முப்படை தளபதிகள் , சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ராஜதந்திரிகள் மேலும் சிறப்பு விருந்தினர்களும் விசேட அதிதிகளாக   கலந்துகொண்டனர்.

இதன் முதல் நிகழ்வாக  இலங்கை இராணுவக் வைத்திய  கல்லூரியின் தலைவறும்  விமானப்படை  வைத்திய பிரிவின்  பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ஜயவீர  அவர்களினால்  வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. எதிர்கால-இராணுவ மருத்துவம் : இராணுவ மற்றும் சிவில் மருந்து அபிவிருத்தி "எனும் தலைப்பின் கீழ் கௌரவ அமைச்சர் அவர்கள் உரை நிகழ்தினார்.

இந்த அமர்வில் பிரதான உறையை  முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் வைத்தியர்  ரோஜர் வெண் ஹூப்  அவர்களினால் '' இராணுவ மற்றும் சிவில் மருத்துவத்தில் உள்ள ஆபத்துக்கல் ''எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த அமர்வுகள்  2019 மார்ச் 23 தொடக்கம் 24 வரை  இடம்பெற்றன  இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  பிரதிநிதிகள் 32 பேர் கலந்து கொண்டனர்  இதனபோது யுத்தத்தின்மூலம் காயமுற்றவர்களை மீட்டல் ,மருத்துவ அறிவியல்,விமான மூலம் மருத்துவம், பெண்கள், குழந்தைகள் மற்றும் இராணுவம்,தீவிர சிகிச்சை மருத்துவம்,உடல் உறுப்புகளை அகற்றுதல் மற்றும் செயற்கை உறுப்புகளை மாற்றுதல்,மருத்துவம் மற்றும் பல்வகை ஒப்பீடு: சிறந்த விளைவுக்காக, உணவு மற்றும் உடல் பருமன், மற்றும் விளையாட்டு மருத்துவம்.போன்ற தலைப்புக்களில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் பிரதான நோக்கம் இராணுவ மருத்துவத்திழும்  ஆராய்ச்சி மருத்துவத்திலும்  பயிற்சியும் ஆலோசனையும் வழங்குவதாகும். இது சர்வதேச இராணுவ மருத்துவக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை