கல்டெக்ஸ் ரக்பி சுற்றுப்போட்டியில் விமானப்படைக்கு பிலேட் சாம்பியன் பட்டம்
10:35am on Sunday 14th August 2011
கடந்த 12.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை கடுநாயக்க முகாமினில் இடம்பெற்ற கல்டெக்ஸ் ரக்பி சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை அணி சி.எச்.எப்.சி. கழகத்தினை 46- 07 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடையச்செய்து அபார வெற்றியினை பெற்றது.

எனவே இங்கு முதற்சுற்றில் விமானப்படை அணி 22 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் சுற்றில் ராதிக கெட்டிஆரச்சி மற்றும் சரத் செனவிரத்ன ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் இறுதியில் 46- 07 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

எனவே இங்கு பிரதம அதிதியாக விமானப்படை ரக்பி அணியின் தலைவர் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரியுமான "எயார் கொமடோர்" என்.எச். குணரத்ன அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை