இரு விமானப்படை வீரர்களுக்கு விரோதர விபூஷண பதக்கம் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு .
3:40pm on Tuesday 10th September 2019
இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி முப்படையின் சேனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இரு விமானப்படை வீரர்களுக்கு விரோதர விபூஷண  பதக்கம்  கடந்த 2019 ஆகஸ்ட் 19ம் திகதி  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்ட்டது .

காலம்சென்ற வாரொண்ட் அதிகாரி யாபாரத்ன மற்றும் கோப்ரல் ரத்நாயக்க ஆகியோர்க்கே இந்த பதக்கம்கள் வழங்கிவைக்கப்பட்டது.

காலம்சென்ற வாரொண்ட் அதிகாரி யாபாரத்ன  அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு  மே மதம் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடும்போது  தனது உயிரை  நீத்தார் அதற்காக அவரின் மனைவிக்கு இந்த பதக்கம் வழங்கிவைக்கப்பட்டது .

கோப்ரல் ரத்நாயக்க வகைகள் 2016ம் ஆண்டு  டிசம்பர்  21 ம் திகதி மட்டக்களப்பு  ஆற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட  பொதுமக்களின்  உயிரை மீட்டெடுத்தான் காரணமாக அவர்க்கும் இந்த பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனபோது  ஜனாதிபதி செயலாளர் திரு. செனவிரத்ன ,பாதுகாப்பு செயலாளர் திரு. சாந்த கோட்டெகோட மற்றும் முப்படை பிரதானி அட்மிரல் ரவிந்ர குணவர்தன  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஆகியோர் பங்கேற்றனர்

பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிருக்கு ஆதரவாக நின்ற துணிச்சலானவர்களுக்கு  வீர விபூஷண்ய பதக்கம் வழங்கப்படுகிறது.இந்த  பதக்கம் பெற்றவர்களுக்கு அவர்களின் பெயருக்குப் பிறகு WV பெயர் வழங்கப்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை