இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் படைபிரிவினால் மத்திய ஆபிரிக்க குடியரசில் தொடர்ந்தும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் இடம்பெறுகின்றன .
1:02pm on Saturday 14th September 2019
மத்திய ஆபிரிக்க குடியரசில் இலங்கை விமானப்படை  இல  04ம் ஹெலிகொப்டர் படைப்பிரிவினால்  இடம்பெறும்  அமைதிகாக்கும்  சேவையின்  ஒரு வேலைத்திட்டமாக ஒரு மாதகாலமாக  இருந்து மூக மேம்பாட்டு திட்டங்கள்   இடம்பெறுகின்றன.

இதன்போது இராணுவ மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நான்கு முக்கிய திட்டங்கள் மற்றும் பல மருந்து விநியோக திட்டங்கள் சிலவும் ஆரம்பிக்கப்பட்டது.  

மத்திய ஆபிரிக்க குடியரசில் பிரயா  நகரத்தை அண்மித்த  பகுதியில்  வசிக்கும்  ஏழை எளிய மக்களுக்கும் யுத்தத்தின் போது மனதளவில்   பாதிக்கப்பட்ட   சிறுவர் சிறுமிகளுக்கு  அவர்களின் மனதை சந்தோசப்படுத்த அவர்களுக்கு   பரிசில்கள் மற்றும் அத்தியாவசிய உபகாரணம்கள் என்பனவழங்கி  வைக்கப்ட்டது.

இந்த திட்டத்தின் மூலம் 8 வயதிற்குட்பட்ட 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர்.   விமானப்படை  ஹெலிகொப்டர் படைப்பிரிவின் மூலம்  சிறுவர்களுக்கான ஆடைகள் மற்றும் கால்பந்து  உட்பட  விளையாட்டு உபகரணம்கள் வழங்கப்பட்டதுடன்  பாடசாலை சிறுவர்கள் 300 பேருக்கு  பாடசாலை  உபகரணம்கள்  வழங்கிப் வைக்கப்பட்டது    

ஹெலிகொப்டர் படைப்பிரிவின் அங்கத்தவர்களினால் தமது  ஒருநாள்  உணவு  நிதியில் இருந்து 2000 ம் சத்துணவு பொதிகள்  அந்த நகரவாசிகளுக்கு  அளிக்கப்பட்டது.

இந்த  இராணுவ மற்றும் பொதுமக்கள் ஒருமைப்பாட்டு திட்டத்தின் மூலம் பல மருந்து விநியோக திட்டங்கள் பிரியா நகர  பிராந்திய மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்த மருந்து தொகுதிகள்  அவரசர  உயிர்காக்கும் மருந்துகள் , நுண்ணுயிர் கொல்லிகள்,வலி நிவாரணிகள் மற்றும் பல மருந்துகளும் உள்ளடங்குகின்றது.

இந்த மருந்து தொகுதிகள்  அவரசர  உயிர்காக்கும் மருந்துகள் , நுண்ணுயிர் கொல்லிகள்,வலி நிவாரணிகள் மற்றும் பல மருந்துகளும் உள்ளடங்குகின்றது .

இந்த வேலைத்திட்டம்  விமானப்படை  ஹெலிகொப்டர் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி   விங் கமாண்டர்   ரசங்கா டி சோய்சாவின் வழிகாட்டுதலின் கீழும் மற்றும் கிழக்கு ஐக்கிய நாடுகளின்  தலைமையகத்தில்  இராணுவம் - சிவில் ஒருமைப்பாடு  அதிகாரி  எகிப்திய இராணுவத்தின் மேஜர்   துவா அலி  இஸ்மாயில் அவர்களின்  வஅறிவுரையின் கீழ் செயற்படுத்தப்பட்டது .

விமானப்படை ஹெலிகாப்டர் படைப்பிரிவின் அனைத்து உறுப்பினர்களும் இந்த பணிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை