எயார் ஷீப் மார்ஷல் ரோஷன் குணதிலக அவர்களுக்கு மார்ஷல் ஒப்பி தி எயார் போர்ஸ் எனும் பத்தி நிலை உயர்வு
8:39pm on Friday 27th September 2019
இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல்முரையாக  இலங்கை விமானப்படை முன்னாள் விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் அவர்களுக்கு கடந்த 2019 செப்டம்பர் 19ம் திகதி  முப்படை தளபதியும் இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் தலைவருமான  அதிமேதகு  ஜனாதிபதி  மைதிரி பாலசிறிசேன அவர்களினால்  விமானப்படையின் பிரிவின் அதி உயர்  பதவியான ''மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் '' எனும் பதவி வழங்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதிகள்  பலரும் முப்படை அதிகாரிகளும்   கலந்து கொண்டதுடன்  முன்னாள் கடற்படை தளபதி  அட்மிரல்  வசந்த கர்ணாகோட அவர்களுக்கும்  '' அட்மிரல் ஒப் தி பீல்ட் '' எனும் உயர்பதவியும் வழங்கப்பட்டது.

''மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ''  எனும் நிலையில் உள்ளவர்  தனது சேவையில் ஒய்வு பெறுவதும்  இல்லை மேலும்  ஒரு அமைச்சரின் தரநிலைக்கு சரிசமமான பதவி நிலையும் கிடைக்கப்பெறும்  எனப்து விசேட அம்சமாகும் .இந்த உயர்நிலைக்கு ஐந்து  நச்சத்திரம்கள்  வழங்கப்படும் . மேலும் இடது கையில்  ''மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் '' நிலைக்கான  கோளும்  வழங்கப்படும் மேலும் இந்நிலையில் பதவி வகிப்பவர்  ஜனதிபதி மற்றும் மன்னர்களுக்கு மட்டுமே  தனது மரியாதையை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

முன்னாள்  கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளான  அட்மிரல் வசந்த கர்ணாகோட மற்றும் எயார் ஷீப் மார்ஷல் ரோஷன் குணதிலக ஆகியோரின் வருகையின் பின்பு  அவர்கள் தொடர்பாக ஒரு குறுகிய ஆவணப்படம் விளம்பரப்படுத்தப்பட்டது.  இறுதியாக  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்தார். அதன்பிறகு  பாதுகாப்புத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன முன்னாள் தளபதிகள் குறித்த சிறப்பு மேற்கோளைப் வாசித்தார். அதன்பின்பு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால்  ''மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ''மற்றும்  '' அட்மிரல் ஒப் தி பீல்ட் ''  எனும் பதவிநிலைகள் இருதளபதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்கள்  அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்பு ''மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ''  ரோஷன் குணதிலக  மற்றும்  '' அட்மிரல் ஒப் தி பீல்ட் ''  வசந்த கர்ணாகோட ஆகியோருக்கு அனைவறினாலும் வாழ்த்துக்கள் அளிக்கப்பட்டது.  
விமானப்படை மற்றும் கடற்படை  வீரர்களினால் மார்ஷல் ஒப் தி எயார் போர்ஸ் ''  ரோஷன் குணதிலக  மற்றும்  '' அட்மிரல் ஒப் தி பீல்ட் ''  வசந்த கர்ணாகோட ஆகியோர்  இராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை