இலங்கை கொக்கல விமானப்படை படைத்தளத்தின் 35 வது வருட நினைவு தின நிகழ்வு.
6:53pm on Tuesday 29th October 2019
இலங்கை கொக்கல     விமானப்படை  படைத்தளத்தின் 35 வது  வருட நினைவு தின நிகழ்வுகள்  கடந்த 2019ம்  ஆண்டு அக்டோபர் 19  ம் திகதி   கொண்டாடியது.

இந்த  படைத்தளம்  ராயல்  விமானப்படையினரால்  (1939-1945 ) கலப்பகுதியின் 02ம் உலக யுத்தத்தின் போது  413ம்  படைப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த யுத்தத்தின் பின்பு 413 ம் படைப்பிரிவானது கைவிடப்பட்டு  துருப்புக்கள் அனைவரும்  வெளியேற்றப்பட்டனர் .அதன்பின்பு 1982ம் ஆண்டு  கொக்கல  படைத்தளம் ஆனது  விமானப்படை  தளப்பிரிவாக  வர்த்தமானி வெளியிடப்பட்டு  பிலைட்  லேப்ட்டினல் ஏ டீ  பவுல்  அவர்கள்   கொக்கல  விமானப்படை  தளத்தின் முதலாவது கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் .புதிய தளத்தின்  ஆரம்ப  விழா 1984 அக்டோபர் 19ம் திகதி  அன்று நடைபெற்றது.

35 வது   வருட நினைவை முன்னிட்டு   கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பியசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ்  சிரமதான பணிகள் இடம்பெற்றது  இதன்போது  ஹபரடுவா மற்றும் கோகலா சாலை ஓரங்களில்  நடைபாதைகள் சுத்தம் செய்யப்பட்டது .

மேலும் அன்றய தினம் காலை பரீட்சன அணிவகுப்பு  கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டதோடு  மென்பந்து கிரிக்கெட் போட்டியும்  பொதுநிலை  பகல் போசன நிகழவும் இடம்பெற்றது இதன்  போது  அணைத்து அதிகாரிகளும்  படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை