பயிற்சி முடித்து வெளியேறிய விமானப்படையினர்
11:34am on Thursday 8th September 2011
விமானப்படையை (இல.149 ஆம் நிரந்தர ஆண்கள் பயிற்சி, இல.106 ஆம் தொண்டர் ஆண்கள் பயிற்சி, இல. 23 ஆம் நிரந்தர மகளிர் பயிற்சி மற்றும் இல. 08ஆம் நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்ட மகளிர் பயிற்சி) சேர்ந்த 633 படையினர் தியதலாவை விமானப்படை பயிற்சிப் பாடசாலையில் இருந்து தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாய்நாட்டிற்கு சேவை செய்யும் முகமாக கடந்த செப்டம்பர் 02ஆம் திகதி விமானப்படையினராக வெளியேறினர்.

இந்த பயிற்சின் மூலம் முறைப்பட்ட படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, போர்க்களப்பயிற்சி, படையணித்திறம், வரைபடம் வாசித்தல், விமானப்படை சட்டம், விமானப்படை அமைப்பு, நிர்வாகம் போன்ற கல்வி அறிவுகளை விமானபடையினருக்கு வழங்கப்பட்டது விசேடம்சமாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படையின் தரைமார்க்க பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" AM டி சொயிசா அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் தியதலாவை விமானப்படை முகாம் கட்டளை அதிகாரியான குரூப் கெப்டன் ஜனக அமரசிங்க உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான விருதுகளை வழங்கிவைத்தனர்.

மேலும் பிரதம விருந்தினருக்கு விமானபடையினரால் விசேட அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை