வெளிசர விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட41 பேர் வீடுதிரும்பினர்
9:02am on Tuesday 26th May 2020
வெலிசராவில் உள்ள சுவாச நோய்களுக்கான தேசிய மருத்துவமனையில் அமைந்துள்ள விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில்  தனிமைப்படுத்தப்பட்ட 41   நபர்களை   கடந்த 2020 மே 22  ம் திகதி தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்

இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் வெலிசரா தேசிய மருத்துவமனையின் 11 மற்றும் 12 வார்டுகளை புதுப்பித்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.

இவர்களில் 39 பொதுமக்கள் கேரவலபிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், 2 பேர் நாரஹன்பிதா பகுதியைச் சேர்ந்த சிறு வணிகர்கள். இந்த  தனிமைப்படுத்தல்  மய்யம் ஏக்கல விமானப்படையினால்  பராமரிக்கப்படுகின்றது .

இதுவரை  1377 பணியாளர்கள் பராமரிக்கப்பட்டு, 5 விமானப்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், இரணைமடு , முல்லைத்தீவு , வன்னி, பலாலி மற்றும் வெலிசராவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை