சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆணையம் பெறாத அதிகாரிகளின் மேலாண்மை படிப்பில் 129 உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
3:24pm on Wednesday 6th September 2023
இலக்கம் 20 ஆங்கில ஊடகம் மற்றும் இலக்கம் 91 சிங்கள ஊடக ஆணையிடப்படாத அதிகாரிகள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  கடந்த , 2023 ஆகஸ்ட் 13  அன்று சீனக்குடா விமானப்படை அகாடமி அதிகாரிகள் முகாமைத்துவப் பள்ளியில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  நிர்வாக பணிப்பாளர் எயார் கொமடோர் சிடிஆர் கே.எம்.கே.கப்பெட்டிபொல அவர்கள் கலந்துகொண்டார் .

இலக்கம் 20 ஆங்கில ஊடகம் மற்றும் இலக்கம் 91 சிங்கள ஊடக முகாமைத்துவ பாடநெறிக்கான இலங்கை விமானப்படையின் 67 சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் 57 ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரிகள், 04 இராணுவ ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரிகள், மற்றும் கடற்படையை சேர்ந்த  மூத்த ஆணையரல்லாத அதிகாரி ஒருவறும், ஜாம்பியன் விமானப்படையின் மூத்த ஆணையிடப்படாத அதிகாரி ஒருவர் மற்றும் பங்களாதேஷ் விமானப்படையின் மூத்த ஆணையிடப்படாத அதிகாரி ஒருவர் கலந்து கொண்டார். மொத்தமாக 131 பேருக்கு சான்றுதல்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சார்ஜென்ட் ரத்நாயக்க ஆர்.எம்.சி.ஆர்.கே (கணக்கு உதவியாளர்) மற்றும் கோப்ரல் நிஷான் கே.ஏ (ஒழுங்கு) ஆகியோர் ஆங்கில ஊடகப் பாடநெறி எண்.20  இல் சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரி மற்றும் ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரி  பாடநெறியில் சிறந்த சகலதுறையிலும் சிறப்பாக செயற்ப்பட்டவர்களுக்கான   விருதுகளைப் பெற்றனர். இதேவேளை, சிங்கள ஊடகப் பாடநெறி இலக்கம் 91 இன் சிறந்த சகலதுறை சிரேஷ்ட மற்றும் இளைய ஆணையற்ற அதிகாரிகளாக சார்ஜென்ட் விஜேகோன் டபிள்யூ.எம்.பி.சி.பி (நிர்வாக உதவியாளர்) மற்றும் கோப்ரல் ஏக்கநாயக்க (இலங்கை இராணுவம்) ஆகியோர் முறையே விருது பெற்றனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை