உலக சிறுவர் தினம் விமானப்படை அருங்காட்சியகத்தில் கொண்டாடப்பட்டது.
8:10pm on Wednesday 11th October 2023
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, ரத்மலானை விமானப்படை அருங்காட்சியகத்தில் 2023 ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்கான விசேட  நிகழ்வுகள்   இடம்பெற்றது.  டிவி தெரண மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த இந்த தனித்துவமான நிகழ்வில் 25,000க்கும் மேற்பட்ட சிறார்கள்  கலந்து கொண்டனர்.

விமானப்படைத் தளபதியின் சார்பாக தரைப்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு கெளரவ விருந்தினராக பிரபல தொழில்முனைவோரும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வர்த்தக   நிபுணருமான தெரண மேக்ரோ என்டர்டெயின் மென்ட் தலைவர் திரு.திலித் ஜயவீர அவர்கள் கலந்து கொண்டார்.

பிரதம அதிதியை விமான சாரணர்கள் அன்புடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் இளைஞர் பங்கேற்பாளர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல வேடிக்கையான நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வின் போது திரு.திலித் ஜயவீர விமானப்படை சேவை வனிதா பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினார்.

மேலும் , ரத்மலான விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேரா, விமானப்படை ஊடக பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க, விமானப்படை அருங்காட்சியக கட்டளை அதிகாரி குரூப் கப்டன் தயான் சுமனசேகர ஆகியோர் இந்த  விழாவில் கலந்துகொண்டனர்.


நிகழ்வின் சிறப்பம்சமாக, கிராமப்புறங்களில் வசிக்கும் 100 மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் நோக்கில்  விமானப்படை, மற்றும் டீ வி  தெரன, மஞ்சி பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன்  . லங்காகம, வாழைச்சேனை , ஹட்டன், வயாவிளான் ஆகிய இலங்கையின் நான்குதிசையிலிருந்து வருகை தந்த இந்த மாணவர்களுக்கு கொழும்புக்கான இலவச பயண வாய்ப்பு வழங்கப்பட்டது.


A memorable experience for 100 students residing in rural areas
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை