எயார் வைஸ் மார்ஷல் சேனநாயக்க அவர்கள் தனது சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
12:26pm on Sunday 29th October 2023
எயார் வைஸ் மார்ஷல் ரஞ்சித் சேனாநாயக்க 35 வருடங்களுக்கும் மேலாக தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவையை முடித்து 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை விமானப்படையிடம் இருந்து விடைபெற்றார்.ஓய்வுபெறும் போது கொழும்பு விமானப்படைத் தலைமையகத்தில் பிரதிப் படைத் தளபதியாக பதவி வகித்தார். எயார் வைஸ் மார்ஷல் சேனாநாயக்க அவர்களுக்கு விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள்  உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வை  தனது அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

தேசத்திற்கும் குறிப்பாக இலங்கை விமானப்படைக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதற்காக விமானப்படைத் தளபதியால் அவர் பாராட்டப்பட்டார். எமது தாய்நாட்டிற்கு தேவைப்படும் காலங்களில் அவரது நடவடிக்கைகளும் அவரது வீர வரலாறும் விமானப்படையின் வரலாற்றில் பதிவு செய்யப்படும் என விமானப்படைத் தளபதி வலியுறுத்தினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் விமானப்படை தளபதி மற்றும் எயார் வைஸ் மார்ஷல் சேனாநாயக்க ஆகியோருக்கு இடையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. கடைசியாக விமானப்படை தலைமையகத்தில் இருந்து புறப்படும் முன் அவருக்கு விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவினால் இராணுவ அணிவகுப்பு  மரியாதை வழங்கப்பட்டது.


விமானப்படைத் தளபதி மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி எனோகா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தேசத்திற்கு ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி எயார் வைஸ் மார்ஷல் சேனாநாயக்க மற்றும் அவரது அன்புத் துணைவிக்கு பிரியாவிடை இரவு விருந்தொன்று இடம்பெற்றது.
விமானப்படை தளபதி  மற்றும் விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்களால் .இந்த தனித்துவமான நிகழ்வு கொழும்பு விமானப்படை தலைமையக அதிகாரிகளின் மெஸ் வளாகத்தில் இடம்பெற்றது.

எயார் வைஸ் மார்ஷல் ரஞ்சித் சேனாநாயக்க 1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி பிறந்தார். இவர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் பெருமைக்குரியவர். அவர் 1988 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி இலங்கை விமானப்படையில் ஏரோநாட்டிகல் மற்றும் ஜெனரல் இன்ஜினியரிங் பிரிவில் அதிகாரி கேடட்டாக 19வது அதிகாரி கேடட் குழுவுடன் இணைந்து தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளியில் அதிகாரி கேடட் அடிப்படை போர் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தார். இலங்கை விமானப்படை சீனக்குடா  விமானப்படை தளத்தில்  அடிப்படை நிர்வாக பாடநெறி மற்றும் கிளை பயிற்சி நெறியை நிரைவுசெய்து  . 06 ஜூலை 1990 இல் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், தனது சேவைக்காலத்தில் தற்போதைய நிலைக்கு 01 மே 2022 அன்று தற்போதைய பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

இவர் தனது சேவையின் போது இலக்கம் 06 படைப்பிரிவின் தளபதி மற்றும் இலக்கம் 02 படைப்பிரிவின் தளபதி, விமானப்படை இரத்மலானை தள கட்டளை அதிகாரி, ஏகல விமானப்படை தொழிற்பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி என பல முக்கிய நியமனங்களில் பணியாற்றியுள்ளார் மேலும் அதிகாரி ஜெனரல் பொறியாளர் ஏ, கட்டளைத் தர உறுதிமொழி அதிகாரி, விமானச் செயலாளர், பிரதிப் பணிப்பாளர் பொறியாளர், பிரதிப் பணிப்பாளர் விமானப் பொறியாளர், பணிப்பாளர் நாயகம் பொறியாளர், பணிப்பாளர் நாயகம் விமானப் பொறியாளர் மற்றும் இறுதியாக அவர் இலங்கை விமானப்படையின் பிரதிப் பிரதானியாகவும் கடமையாற்றினார் .

அவரது சிறப்பான மற்றும் முன்மாதிரியான சேவைக்காக, அவருக்கு "உத்தம சேவா பதக்கமா" விருது வழங்கப்பட்டுள்ளது. Mi-17 விமானத்தின் பொறியியலாளராக வான் நடவடிக்கைகளின் போது அவரது துணிச்சலுக்காக "ரண விக்ரம பத்கம்மா மற்றும் ரண சூரா பத்கம்மா" ஆகிய இரண்டு வீரப் பதக்கங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை