"எயார் சீப் மார்ஷல்' ஒலிவர் மெரில் ரனசிங்க அவர்கள்
பன்னிபிடிய தர்மபால கல்லூரியின் ஆதிமாணவன் என்பதுடன் இவர் 1968- 02- 07 ஆம்
திகதியன்று சாஜன்ட் விமானியாக இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டதுடன்
,1994- 02- 17 ஆம் திகதியன்று விமானப்படைத்தளபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
இவரது ஆரம்ப பயிற்ச்சியினை தியதலாவை விமானப்படி
முகாமினில் நிறைவுசெய்துகொண்டதுடன், பின்னர் விமானப்பயிற்ச்சிக்காக
சீனக்குடா முகாமினில் இணைந்துகொண்டு 1969 ஆம் ஆண்டு விமானியாக
தெரிவுசெய்யப்பட்டார். பின்னர் 1987ஆம் ஆண்டு இல. 04
விமானப்பிரிவில் இணைந்துகொண்ட அதேநேரம் அநுராதபுரம் விமானப்படை முகாமின்
கட்டளை அதிகாரியாகவும் ,விமான தொழிற்பாட்டுக்கான பணிப்பாளராகவும்,மன்ற
அதிகாரிகளின் பிரதானியாகவும் செயற்ப்பட்டதோடு இவர் அமெரிக்காவின்
மெக்ஸ்வோல் மற்றும் இந்தியாவின் புதுடில்லி பாதுகாப்பு கல்லூரிகளில்
பாதுகாப்பு தொடர்பான பட்டம் மற்றும் அமெரிக்கா கெலிபோனியா
பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட முகாமைத்துவ பயிச்சிநெறியினையும்
நிறைவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும்
இவர் விளையாட்டு துறைக்கு அதிகமான பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன்
,இவரது காலத்தில் இலங்கை விமானப்படையானது தேசிய தர சன்மானத்தினை
பெற்றுக்கொண்டதோடு ,இவர் 1998 ஆம் ஆண்டு "விஷிஸ்ட சேவா விபூஷன சேவா", உத்தம
சேவா பதக்கம்" போன்ற பதக்கங்களுடன் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.