
றோயல் சிலோன் விமானப்படையானது 1951ம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி குறூப் கெப்டன் ஜி.சி. பிலேடனினால் நிருவப்பட்ட போது றோயல் சிலோன் விமானப்படைக்கென சரியானதோர் கொடியொன்று வடிவமைக்கப்பட்டு இருக்கவில்லை இந்நிலையில் 1951ம் ஆண்டு பெப்ரவரி 23ம் திகதி இலங்கையின் தேசிய படைகள் மற்றும் படைப்பிரிவுகளுக்கான வைபவ மற்றும் பிற சீருடைகளை தீர்மானிக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
முதலாவது உலகப்போரின் போது பிரித்தானிய விமானங்கள் எவ்விதமான அடையாளத்தினையும் கொண்டிருக்காத நிலையில் தரையிரங்கியது இதனால் தமது தரப்பினர்களின் தாக்குதல்களுக்கே அவை உள்ளாகின.
பிரித்தானியப் படைகள் தங்கள் விமானங்களை அடையாளம் கண்டு கொள்ள ஜூனியன் ஜெக் என்பவர் மேலும் கீழுமாக விமானங்களை வரைந்தார் ஆனால் துரதுஷ்டவசமாக விமானங்கள் தாழ்வாக குறுக்கே பயணிக்கும் போது அது பெரும்பாலும் ஜேர்மனி விமானங்களைப் போல் உள்ளதை ஜூனியன் ஜெக் அவதானித்தார் , அதனால் அப்பிர்ச்சினை தீரவில்லை.
1914ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மிக எளிதாக அடையாளம் கானும் விதமாக பிரான்ஸ் விமானங்கள் சிவப்பு,வெள்ளை மற்றும் நீல நிறத்திலான வட்டங்களை பயன்படுத்தியது, எனினும் அதற்கு நேர் எதிரான முறையில் நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு வர்ணங்களை பிரித்தானியா பயன்படுத்தியது. இந்த அடையாள குறியீடானது பிரித்தானிய விமானப்படையினரினால் 1914 - 1918 வரையிலான காலப்பகுதியில் நடைப்பெற்ற யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டது.
1951ம் ஆண்டு றோயல் சிலோன் விமானப்படை தனது கொடியை வடிவமைத்தபோது அதன் அடையாளக்குறி நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களால் அடையாளப்படுத்தப்பட்ட்டது.
சிங்கக் கொடியின் இரு வர்ணங்களும் இரு பக்கங்களிலும் குறியிடப்பட்டது.மூன்று வட்டங்கள் இரு வட்டங்களாக மாற்றப்பட்டதுடன் இவை சிவப்பு ,கபிலம்,மஞ்சள் ,பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் இரு சிறகுகளிலும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
றோயல் சிலோன் விமானப்படையின் சேவைகளின் பாரம்பரியம் எனும் பிரசுரத்தின் படி அதன் கொளரவத்தை பேணும் விதமாக எண்ணிலடங்காதவர்கள் உயிரைவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் றோயல்சிலோன் விமானப்படை1951ம் ஆண்டு தனது கொடியை அறிமுகப்படுத்தியதையடுத்து ,றோயல் விமானப்படையின் இலட்ச்சினையானது நீலம் ,வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்ட இலட்ச்சினையானது மெதுவாக மாற்றப்பட்டது அதனடிப்படையில் இரு இறக்கைகளிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு ,கபிலம் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டன.
என்றாலும் சிங்கக்கொடியின் வர்ணங்கள் பயன்படுத்தப்படும் போது அதுவே தேசிய கொடியாகவும் இருந்தது. றோயல் சிலோன் விமானப்படையானது ஏனைய விமானப்படைகளைப்போன்றே தனது நாட்டின் கொடியில் பயன்படுத்தப்படும் நிறங்களை பயன்படுத்த தீர்மானித்தது.
அதனடிப்படையில் மூன்று வட்டங்களாக இருந்தவை இரு வட்டங்களாக மாற்றப்பட்டதுடன் அவை சிவப்பு ,கபிலம் மற்றும் செம்மஞ்சல் நிறங்களைக் கொண்ட இறக்கைகளாக மாற்றப்பட்டதுடன் ஏனெனில் அந்நிறங்கள் எமது தற்போதைய தேசியக்கொடியில் பயன்படுத்தப்படும் நிறங்களாகும்.