2001- 03- 09 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையின்
பொன்விழாவினை முன்னிட்டு ஒரு ரூபாய் நாணயக்குற்றியினை இலங்கை மத்திய வங்கி
வெளியிட்டது. மேலும் இதில் விமானப்படை என்று மும்மொழிகளிலும்
எழுதப்பட்டுள்ள அதேநேரம் சிப்மன்க், கபீர், மிக் 27 போன்ற விமானங்களும்
பொறிக்கப்பட்டுள்ளதுடன் இதனை திருமதி. பத்மாஞ்சலி கருனாத்திலக அவர்களால்
வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இந்நானயமானது
நிக்கல் உலோகம் மூலம் இங்கிலாந்து நிருவனம் ஒன்றின் மூலம்
தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இது 25.44 மி.மி. விட்டத்தினையும், 7.13
எடையினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.