இலங்கை விமானப்படையின் தளபதி

எயார் மார்ஷல்

ஆர். ஏ. யூ. பீ. ராஜபக்ஷ

RSP and two Bars, VSV, USP, MSc (MOA) USA, MSc (Def Stu) in Mgt, MA in IS&S (UK), BSc (Def Stu), MIM (SL), AMIE (SL), rcds, psc

இலங்கை சோசியலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதியும் முப்படை சேனாதிபதியுமான அதிமேதகு ரணில் விக்ரமசிங்க அவர்களினால் எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் ஏயார் மார்ஷல் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டு 19வது புதிய விமானப்படை தளபதியாக 2033 ஜூன் 30ம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

1969ம் ஆண்டு ஜனவரி 29ம் திகதி கம்பஹா மாவட்டத்தின் இஹலகம பிரதேசத்தில் பிறந்த எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கம்பஹா பராக்கிரம வித்யாலயாத்தில் ஆரம்பக் கல்வியையும் பண்டாரவத்த, மற்றும் பண்டாரநாயக்க கல்லூரியிலும் கல்விப் பயணத்தை தொடர்ந்து அவர் அவரின் இடைநிலை கல்வியினை கொழும்பு ஆனந்தா கல்லூரியில் தொடர்ந்தார் . நாட்டிற்காக தனது அர்ப்பணிப்பான சேவையை வழங்க அவர் 1988 ம் ஆண்டு அக்டோபர் 06ம் திகதி சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 06வது கடேட் உள்வாங்களில் கடேட் அதிகாரியாக இணைந்தார்.

எயார் மார்ஷல் உதேனி கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் அடிப்படை போர்ப்பயிற்சி மற்றும் பட்டப்படிப்பை நிறைவுசெய்த அவர் அனுராதபுர விமானப்படை தளத்தின் இல 01 விமானிகளுக்கான பயிற்ச்சி படைப்பிரிவில் அடிப்படை விமானி பயிற்சிநெறியை நிறைவுசெய்து 33வது கடேட் பயிற்சிநெறியில் சிறந்த விமானியாக தெரிவானார். பின்னர் அவர் இரத்மலான விமானப்படை தளத்தில் இல 2 படைப்பிரிவில் உயர்நிலை விமானி பயிற்சிகளை மேற்கொண்டார். 1990 அக்டோபர் 05ம் திகதி இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு கல்விபீடத்தில் பொதுக் கடமைகளுக்கான விமானிகள் கிளையில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் வீ .வீ. ஐ.பி கேப்டன் விமானியுமாவார் அவர் 10 வகையான விமானங்களை ஓட்டுவதில் தலைசிறந்தவர் அவற்றுள் CESSNA–150,ரக விமானம் உட்பட HARBIN Y-12, HS–748, SF–260TP, IA–58 PUCARA, B–200T, AN–32 மற்றும் C–130. ரக விமானங்கள் போன்றவை உள்ளடங்கும் அவர் இதுவரை 7000 மணிநேரத்துக்கும் அதிகமாக விமானியாக பறக்கும் நேரங்களை கடந்து அவர் மிக உயர்ந்த கருவி மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். மேலும் முதன்மை பசுமை மதிப்பீடு மற்றும் சிவில் ATPL (விமானப் போக்குவரத்து விமானிகள் உரிமமும் பெற்றுள்ளார்.

1997 ஆம் ஆண்டு புகாரா விமானத்தின் மூலம் இரவு நேர தாக்குதலை நிகழ்த்தி தன்னை ஒரு தலை சிறந்த விமானியாக நிரூபித்தார் இதன் மூலம் அவசர சூழ்நிலையை சிறப்பாக கையாண்டமைக்காக பல்வேறு பாராட்டுகளையும் பெற்றார் இதன் மூலம் மாட்டின் பேக்கர் விமான நிறுவனத்தினால் கௌரவமான அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் அவருடைய சேவை காலத்தில் பங்களாதேஷ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி கல்லூரியில் கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சி நெறியையும், பாகிஸ்தானில் விமான பாதுகாப்பு பயிற்சியினையும், ஐக்கிய அமெரிக்காவில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பயிற்சியினையும் நிறைவு செய்த அவர் கல்வித்துறையில் சர்ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மேலாண்மையில் பாதுகாப்பு ஆய்வுகளில் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றார் மேலும் அமெரிக்காவில் உள்ள அலபமா வான் பல்கலைக்கழகத்தில் இராணுவ அறிவியல் முதுகலை பட்டமும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய முதுகலை பட்டமும் "இதில் முதன்மை சித்தியும்" பெற்றார். அமெரிக்காவின் புகழ் பெற்ற அலாபமா விமானப்படை வான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பழைய மாணவரும் psc ஆவார். அவர் ஐக்கிய ராஜ்யத்தின் ராயல் பாதுகாப்புக் கல்வி கல்லூரியில் சிறப்பு சர்வதேச பாதுகாப்பு கல்வி மற்றும் யுக்தி பயிற்சி நெறி இணையும் நிறைவு செய்துள்ளார்.

மேலும் அவருடைய சேவைக்காக மதிப்புமிக்க "ரணசூர பதக்கம்" மூன்று முறை பெற்றார் அத்தோடு" விசிட்ட சேவா விபூஷன ", பதக்கம் உத்தம சேவா "பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களுடைய சேவை காலத்தில் பொறிக்கப்பட்ட நியமனங்களாக 2011 முதல் 2012 வரை ஹிங்குராங்கொட விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார். 2012 முதல் 2014 வரை ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மதிப்புமிக்க இலங்கை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதன் மூலம் தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார். ரஷ்யாவில் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சிரேஷ்ட விமானப் பணியாளர் அதிகாரியாக (SASO) நியமிக்கப்பட்டார். அதற்கு பின்னர் 2015 செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் வவுனியா விமானப்படை தளத்த்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், அவர் 2016 செப்டம்பர் 12 ம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 23ம் திகதி வரையிலும், 2018 ஆகஸ்ட் 07ம் திகதி முதல் 2019 ஜூன் 30ம் திகதி வரையிலும் விமானச் செயலாளராகவும் கடமையாற்றினார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் 2020ம் ஆண்டு சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தின் அகாடமியின் கட்டளை அதிகாரியாக தளபதியாக நியமிக்கப்பட்டார் மேலும் கிழக்கு வான் கட்டளை தளபதியாகவும் நியமனம் பெற்றார். பின்னர் அவர் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் தனது பணிக்காலத்தில் கட்டளை அதிகாரியாகவும் தெற்கு வான் கட்டளை மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் தளபதி ( வான் பாதுகாப்பு ) ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் விமானப்படை தலைமயக்கத்தில் வான் செயற்பாட்டு பணிப்பாளராகவும் பின்னர் விமானப்படை தலைமை தளபதியாகவும் பணிவகித்தார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் இராணுவ சாதனைக்கு அப்பால் ஒரு விளையாட்டு வீரராக தன்னை பலமுறை நிரூபித்துள்ளார் அந்த வகையில் அவர் டேபிள் டெனிஸ், டெனிஸ் மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர் விமானப்படையின் சிறந்த தடகள வீரராகவும் செயற்பட்டுள்ளார். அவருக்கு விமானப்படை சிறந்த கோல்ப் மற்றும் டெனிஸ் வீரருக்கான விருதும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் துணைவி இனோக்க ஆவர் மயூரி மற்றும் இனுற ஆகியயோரின் அன்பு தந்தையுமாவர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை