இலங்கை விமானப்படையணி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
11:05am on Wednesday 19th January 2011
48வது சிரேஷ்ட கூடைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படையணி, இலங்கை பாடசாலையணியை  69- 61 எனும் புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்து, கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இம்முறை அணிக்கு 10 பேர் கொண்ட போட்டியாக இடம்பெற்றதுடன், விமானப்படையணியானது முதற்சுற்றில் தொடர்ச்சியாக புத்தளம், கொழும்பு, இலங்கை தரைப்படை, கம்பாந்தோட்டை போன்ற அணிகளுடன் மோதி வெற்றியீட்டியதுடன், அரையிருதிப்போட்டியில் இலங்கை பாடசாலை அணியுடன் மோதியது, போட்டியின் ஆரம்பத்தில் பாடசாலையணி 32 புள்ளிகளைப்பெற்று முன்னிலை வகித்தாலும், விமானப்படையணியின் ஒசந்த உமயங்க மிகச்சிறப்பாக விளையாடி 18 புள்ளிகளை அணிக்காக பெற்றுக்கொடுத்ததன் மூலம் இறுதியில் விமானப்படையணி 64 புள்ளிகளைப்பெற்று வெற்றியீட்டியது.

மேலும் இவ்வெற்றியின் மூலம் விமானப்படையின்  60ஆண்டு வரலாற்றினிலே இரண்டாவது தடவையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியமை இதுவாகும். மேலும் இறுதிப்போட்டி 21- 01- 2011ம் திகதி கண்டி 'கிங்ஸ் வூட்' கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இதில் விமானப்படையணி 'மேர்கன்டைல்' அணியுடன் மோதவுள்ளது, அத்துடன் விமானப்படைஅணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக  'குரூப்கெப்டன்' கெரந்த பேரூசிங்கவும் மற்றும் பயிற்ச்சியாளராக 'எயார் கொமடோர்' கர்ஷ பெர்னான்டுவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை