புதிய கடற்படைத்தளபதியின் விஜயம்
9:42am on Friday 21st January 2011
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை  கடற்படைத்தளபதி 'வைஸ் அத்மிரால்T.W.A.H. திஸநாயக இன்று(20- 01- 2011)கூட்டுப்படைகளின் தளபதியும் இலங்கை விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்'ரொஷான் குணதிலகவினை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

கடற்படைத்தளபதி தனது நியமனத்தினை பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கை விமானப்படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தமை இதுவே முதற்தடைவையாகும் ,மேலும் 'வைஸ் அத்மிரால்'திஸாநாயக்க இலங்கை கடற்படைக்கு ஒரு 'கெடெட்'அதிகாரியாக 1977ம் ஆண்டு இணைந்து கொண்டு,தனது அடிப்படை பயிற்சியினை திருகோணமலையில் முடித்துக்கொண்டதுடன் ,மேலதிக பயிற்ச்சிக்காக இந்தியாவுக்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இவரொரு இளம் அதிகாரியாக சேவையாற்றும் போதே சர்வதேச நலன்புரி பாடநெறிக்காக இங்கிலாந்து சென்றதுடன் மேலும் இவர் 8 ஆண்டுகள் கடலிலும்,15ஆண்டுகள் வடகிழக்கில் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் கடற்படையின் 60 ஆண்டு கால வரலாற்றினிலே 'வைஸ் அத்மிரால்' திஸாநாயக மிகவும் திறமையானதொரு அதிகாரியாக விளங்கியதுடன் அவர் தனக்காக 'ரன சூற பதக்கம்',விஷேட சேவா விபசான்ய பதக்கம்',உத்தம சேவா பதக்கம்' ஐந்து நட்சத்திர சின்னம், உட்படமேலும் பல பதக்கங்களையும் வென்றுள்ளதுடன் ,அவர் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதலில் இருந்து உயிர் தப்பியமையும் குறிப்பிடத்தக்க விடயாமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை