விமானப்படை சைக்களோட்டப்போட்டியின் மூன்றாம் நாள் முடிவு
6:44pm on Monday 24th January 2011
இலங்கை விமானப்படை சைக்களோட்டப்போட்டியின் 3ம் நாள்  கொழும்பு விமானப்படை முகாமுக்கு அருகாமையில் ரசிகர்களின் பாரிய வரவேற்புக்கு மத்தியில் நிறைவடைந்தது.

'எயார் சீப் மார்ஷல்' அசோக அமுனுகம இன்றைய போட்டியினை கண்டியில்  ஆரம்பித்து வைத்ததுடன் இன்றைய போட்டியில் சுமார் 72 வீரர்கள் பங்குபற்றிய அதேநேரம் போட்டியின் மொத்த தூரம் 115 K.M. ஆகும்.இன்றைய நாளின் முதல் அதிவேக சுற்றினை பிலிமதலாவையில் வைத்து விமானப்படையைச்சேர்ந்தசமந்த லக்மால் கடந்ததுடன் ,அவரைத்தொடர்ந்து தரைப்படையைச்சேர்ந்த அஸன்க பிரதீப் மற்றும் ஜானக விஜேசிங்க,விமானப்படையின் ஜீவன் ஜயசிங்க ஆகியோரும் கடந்தனர்.

போட்டி யக்கலையை அடைந்ததும் போட்டியின் வேகம் அதிகரித்ததுடன் ,இரண்டாம் அதிவேக சுற்றினை கிரிபத்கொடையில் வைத்து விமானப்படையின் ஜீவந்த ஜயசிங்க முதலாவதாக கடந்ததுடன் அவரைத்தொடர்ந்து தரைப்படையின் சனத் ஜயசிங்க ,வஸந்த கரிஸ்சந்திர, மற்றும் விமானப்படையின் புத்திக வர்ணகுலசூரியவும் கடந்தனர்.

மேலும் போட்டியின் இருதித்தருவாயில் 'லேக் கவுஸ்'நிறுவனத்துக்கு அருகாமையில் பாதையோரங்கலில் பெறும்தொகையான ரசிகர்கலும், ஊடகவியலாளர்கலும் குழுமியிருந்ததுடன் பலரினதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விமானப்படையின் ஜீவந்த ஜயசிங்க இருதி வேக சுற்றினை முதலாவதாக கடந்ததுடன் அவரைத்தொடர்ந்து தரைப்படையின் சனத் ஜயசிங்க,வஸந்த கரிஸ்சந்திர ஆகியோர் முறையே முதலாம்.இரண்டாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.வெற்றியீட்டியவர்களின் பெயர் விபரங்கள் வருமாரு .

1.புத்திக வர்ணகுலசூரிய- விமானப்படை- 8:21:50
2.டினேஷ் டனுஷ்க- விமானப்படை - 8:22:41
3.வசந்த கரிஸ்சந்திர- தரைப்படை - 8:22:50
4.கேமந்த குமார - கடற்படை- 8:22:50
5.சுவாரிஸ் பிரமேசந்திர- D.M.C.C. - 8:22:52


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை