பாகிஸ்தான் தரைப்படைத்தளபதியின் விஜயம்.
7:45pm on Tuesday 25th January 2011
பாகிஸ்தான் தரைப்படைத்தளபதி "ஜென்ரல்" பேர்வீஸ் அஷ்பாக் கயானி நேற்று
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.இவரோடு அவரது பாரியார் திருமதி.பேகம் சகீதா கயானி உட்பட ஏனைய 6 இராணுவ அதிகாரிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாரு இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட "ஜென்ரல்" பெர்விஸ் அஷ்பாக் கயானி  இன்று கூட்டுப்படைகளின் பிரதானியும் ,விமானப்படைத்தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்" ரொஷான் குணதிலகவினை விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.

'ஜென்ரல்" அஷ்பாக் கயானி பாகிஸ்தான் தரைப்படையில் 1971ம் ஆண்டு ஒரு அதிகாரியாக இணைந்து கொண்டதுடன், இவர் இஸ்லாமாபாத் குவேட்டா கட்டளை மற்றும் மன்ற கல்லூரியில் தனது பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு அமெரிக்கா, கவாய் போன்ற நாடுகளிலும், இஸ்லாமாபாத் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியிலும் தனது பட்டப்படிப்பினை முடித்துக்கொண்டார். மேலும் "ஜென்ரல்"கயானி பாகிஸ்தானில் பல்வேரு படைப்பிரிவுகளுக்கு தலைமைதாங்கியதுடன்,பல்வேறுபட்ட பதவிகளையும் இராணுவ அனுபவங்களையும் பெற்றுள்ளார் குறிப்பாக இஸ்லாமாபாத் பாதுகாப்பு சேவைகள் கல்லூரி,கட்டளைகள் மற்றும் மன்ற கல்லூரிககளில் சேவையாற்றியமையை குறிப்பிடலாம்.

மேலும் இராணுவ செயற்பாடுகளுக்கான இயக்குநராகவும், உள்துறை புலனாய்வு இயக்குநராகவும் செயற்பட்டதுடன்,இவர் ஒரு சிறந்த 'கொல்ப் 'வீரராகவும் ,பாகிஸ்தான்' கொல்ப்'  சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார் என்பதும் விஷேட அம்சமாகும்.

அத்தோடு இவர் கிலால் இம்தியாஸ், நிஷான் இம்தியாஸ் ,போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயாமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை