விமானப்படையின் தீயனைப்பு ஒத்திகை.
8:20am on Monday 21st February 2011
இலங்கை விமானப்படையின் தீயனைப்பு மற்றும் அவசர நடவடிக்கை பிரிவானது 10.02.2011 ம் திகதியன்று' லங்கா' வைத்தியசாலை வளாகத்தினுல் ஓர் ஒத்திகை நடவடிக்கையினை மேற்கொண்டது.

இவ்வொத்திகை நடவடிக்கைக்கு சுமார் 37 படைவீரர்கள் பங்குபற்றியதுடன் ,இதனை கொழும்பு விமானப்படை முகாமின் தீயனைப்பு பிரிவின் கட்டளை அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்'  C.P. கெட்டிஆரச்சி மேற்பார்வை செய்தார்.

இது 3வது வைத்தியசாலைகள் வளாகத்தினுல் மேற்கொண்ட வெற்றிகரமான ஒத்திகையாகும்,அதேநேரம் இவ்வொத்திகையினை மேற்கொள்ளும்போது படைவீரர்கள் அங்கு சிகிச்சை பெருபவர்களின் நலனையும் கருத்திக்கொண்டே மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ்வொத்திகையின் போது மிகவும் சக்தி வாய்ந்த நீர்க்குழாய்கள் மூலம் தீயணைக்கும் விதம் பற்றியும்,கயிறு மற்றும் தீயனைப்பு வாகனங்கள் மூலம் கீழ் உள்ளவர்களை மேல்நோக்கி கொண்டுசெல்லல், அதேபோன்று மேலுள்ளவர்களை கீழ்நோக்கி கொண்டு வருதல் போன்ற ஒத்திகைகளை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுடன் மேற்கொண்டதோடு ,முதலுதவி பயிற்ச்சியினையும் வழங்கியமை விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை